உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி

பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

மே 20-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படத்தை பார்த்த ஊடகவியலாளர் செந்தில்வேல், உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்ப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக இந்த ட்வீட் ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் ட்வீட் பதிவு குறித்து தேடுகையில், அது ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் அப்பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 20-ம் தேதி,” பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக நெஞ்சுக்கு நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்” எனப் பதிவாகி இருக்கிறது. 

Archive link 

senthilvel79 எனும் ஐடி-யில் இயங்கும் ட்விட்டர் பக்கமே செந்தில்வேலின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம். இதற்கு முன்பாகவும், செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் பல ட்வீட் பதிவகளை செந்தில்வேல் வெளியிட்டதாக விமர்சித்து வைரல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க : ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இலங்கை வர வேண்டும் எனக் கூறியதாக செந்தில் வேல் பெயரில் போலி ட்வீட் !

முடிவு : 

நம் தேடலில், பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை, இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது எனக் கூறியதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் வைரலாகும் ட்வீட் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியானது என அறிய முடிகிறது. 

Please complete the required fields.
Back to top button
loader