பிரம்மாண்ட படிக்கற்கள் இருப்பது இராவணனின் கோட்டையா ?

பரவிய செய்தி
இந்த பெரிய படிகளைக் கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான்..
இலங்கையில் உள்ள ராவணன் கோட்டை.
மதிப்பீடு
சுருக்கம்
பெரு நாட்டில் Ollantaytambo-வில் இருக்கும் இன்கா தொல்பொருள் தளமே இது. பழமையான இன்கா தொல்பொருள் தளத்தின் அடிப்பகுதியில் இந்த மிகப்பெரிய நீண்ட படிக்கட்டுகள் போன்ற அமைப்பு அமைந்துள்ளது.
விளக்கம்
இலங்கையை ஆட்சி செய்த இராவணனின் கோட்டையில் மிகப்பெரிய படிக்கட்டுகள் இருப்பதாக மிகப்பெரிய பிரம்மாண்டமான படிக்கட்டுகளின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். பார்ப்பதற்கு ஆச்சரியமூட்டும் இவற்றை இராவணன் கோட்டை என பலரும் நினைக்கின்றனர்.
பல தொல்பொருள் தளங்கள் மற்றும் பழங்கால அரண்மனைகள் அமைத்திருக்கும் பெரு நாட்டில் இத்தகைய பிரம்மாண்டமான படிக்கட்டுகள் காணப்படுகிறது.
Ollantaytambo Ruins :
Ollantaytambo பகுதி பழங்கால இன்கா அரசின் நிர்வாக மையமாக இருந்தது. மேலும், அங்கு அமைத்துள்ள புனிதப் பள்ளத்தாக்கின் வடக்கு முனையாகவும் , அமேசானின் முனையாகவும் அமைந்திருக்கிறது.
இன்கா பேரரசின் ஆட்சிக்காலத்தில் Ollantaytambo இல் உருவாக்கப்பட்ட அரண்மனைக்கு மேலே மிகப்பெரிய படிக்கட்டுகள் போன்ற அமைப்பை உருவாக்கினர். அதற்கு அருகிலேயே மனிதர்கள் எளிதாக மேலே செல்ல படிக்கற்கள் உள்ளன.
பிரம்மாண்டமான அளவில் படிக்கட்டுகள் போன்ற இந்த அமைப்பை உருவாக்க காரணங்கள் இருந்தன. மலைப்பகுதியில் அமைந்த கோட்டையின் மேலே இருந்து கீழே இருப்பவற்றை சரியாக பார்க்க முடியும், படிக்கட்டுகள் மேலே ராணுவ தளம் அமைத்து இருந்தனர். இதனால் ஸ்பானிஷ் படையெடுப்பாளர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சித்தனர்.
மலையில் அமைந்துள்ள சூரிய கோவிலில் இருந்து பார்க்கையில் பிரம்மாண்டத்தின் உச்சமான தொல்பொருள் தளம் முழுவதுமாக காட்சி அளிக்கிறது.
பெரு நாட்டின் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கிய ஒன்றாக Ollantaytambo Ruins இருந்து வருகிறது. ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இன்காவின் Ollantaytambo Ruins கோட்டையை இலங்கையில் உள்ள இராவணன் கோட்டை என தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆக, பிரம்மாண்டமான படிக்கற்கள் போன்ற அமைப்பு இராவணன் கோட்டை இல்லை என இதன் மூலம் தெளிவாகிறது.