This article is from Feb 19, 2021

பெட்ரோல் மீது மத்திய அரசு குறைவான வரியை விதிக்கிறதா ?

பரவிய செய்தி

தொடர்ந்து சமூக வலைதளங்களில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள். உண்மையான காரணம் யார்/ என்ன ? பெட்ரோலின் அடிப்படை விலை – 30.50ரூ , மத்திய அரசின் வரி 17.42ரூ, மாநில அரசின் வரி – 40.55ரூ, விநியோகஸ்தர்-8.50ரூ. மொத்தம் 96.97 ரூ.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் மீது பழிசுமத்துவதாகவும், மத்திய அரசை விட மாநில அரசே அதிக வரியை செலுத்துவதாக ஓர் பட்டியலை வெளியிட்டு இறக்கிறார்கள். கடந்த ஜூலை மாதமே, இதேபோன்ற பட்டியலை பரப்பி மத்திய அரசின் வரி குறைவு என தவறாக பரப்பிக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உண்மையான வரி விதிப்பு எவ்வளவு ?

கடந்த சில நாட்களாக, சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ரூ ஆக உயர்ந்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபட காரணம் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வாட்(VAT) வரியாகும். அதிகபட்சமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 36% வாட் வரியும் + 1.5ரூ சாலை செஸ் வரியும் விதிக்கப்பட்டு உள்ளது.

2021 பிப்ரவரி 18-ம் தேதி நிலவரப்படி, பெட்ரோல் மீது ரூ32.90 மற்றும் டீசல் மீது ரூ31.80 வரியாக விதித்துள்ளது மத்திய அரசு. கடந்த ஆண்டிலேயே மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பெட்ரோல் விலை ரூ100… பிரதமர் மோடி சொல்லும் காரணம் !

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆளும் அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துக் கொண்டிருக்கையில், இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை முந்தைய அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருந்தார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக இருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதை சரிசெய்ய வரியை உயர்த்தி இருந்தார்கள். தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக இருக்கும் போது வரியைக் குறைக்காமல் மேலும் விலையானது உயர்த்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரியே பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்க காரணம்.

இந்தியாவில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி, வாட் வரி, வேளாண் செஸ், சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் என பாதி தொகையை மக்கள் வரியாகவே செலுத்துகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 17.42ரூ வரியும், மாநில அரசு 40.55ரூ வரி விதிப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader