பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என அண்ணாமலை கூறினாரா ?

பரவிய செய்தி
அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன் ?
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோலை ஆடம்பரப் பொருள் எனக் கூறியதாக அக்கட்சியின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இதுகுறித்து, தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், அக்டோபர் 24-ம் தேதி ” அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என சொன்னதாக அறிகிறேன். பாஜகவை திமுக தொட்டு பார்க்கட்டும், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்! ” என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என சொன்னதாக அறிகிறேன்.
பாஜகவை திமுக தொட்டு பார்க்கட்டும், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்!
– மாநில தலைவர் திரு.@annamalai_k#KAnnamalai pic.twitter.com/95RQBtfOHn
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 24, 2021
மேற்காணும் பதிவில் இடம்பெற்ற அண்ணாமலை பற்றிய போஸ்டரில் பெட்ரோல் பற்றி எடிட் செய்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : வீடியோவை வைத்து பாஜகவினரை மிரட்டி அண்ணாமலை பணம் பெற்றதாக போலிச் செய்தி !
கடந்த சில நாட்களில், பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி கார்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது குறித்தும் பதிவிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : எரிபொருள் விலை உயர்வு என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அண்ணாமலை கூறியதாக வதந்தி !
முடிவு :
நம் தேடலில், அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பரப் பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் போஸ்டர் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.