விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை மக்கள் அடித்து நொறுக்குவதாக 45 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .
உண்மை என்ன ?
பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கும் வீடியோ குறித்து தேடுகையில், 2018 அக்டோபர் மாதம் முகநூல் பக்கம் ஒன்றில் இந்த காட்சி அடங்கிய வீடியோ ஒன்று ஒரிசா மாநிலத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளனர்.
ஒரிசாவில் பெட்ரோல் பங்க் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், பெட்ரோல் நிலையத்தில் குறைந்த அளவில் பெட்ரோல் வழங்குவதாக ஏற்பட்ட மோதலால் பங்க்கை உள்ளூர் மக்கள் தாக்கியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
“ஒரிசாவின் பூரி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர் குறைந்த அளவே பெட்ரோல் வழங்கி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியதை அடுத்து ஏற்பட்ட மோதலில் அங்கிருந்த உள்ளூர் மக்களும் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் ” என 2018 செப்டம்பர் 29 ஒரிசா செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பெட்ரோல் விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை மக்கள் அடித்து நொறுக்குவதாக பரவும் வீடியோ தவறானது என அறிய முடிகிறது