இந்தியாவில் பெட்ரோலின் விலை ஏன் அதிகம் தெரியுமா ?

பரவிய செய்தி

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70.43 ரூபாய் ஆகும். ஆனால் நமது அண்டை நாடுகளான நேபாலில் 61.35 ரூபாயாகவும், இலங்கையில் 53.72 ரூபாயாகவும் உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளால் பெட்ரோலியப் பொருள்கள் அதிக விலையில் விற்கப்படுகிறது.

விளக்கம்

2014 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 115 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலையானது தற்போது 50 டாலராக வீழ்ச்சியடைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பாதியாக குறைந்து இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை மட்டும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

Advertisement

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். செப்டம்பர் 15 ம் தேதி நிலவரப்படி, இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலையானது 54.58 டாலர் மட்டுமே. கச்சா எண்ணெய் வாங்கும் விலையானது குறைவானதாக இருக்கும் போது, மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளின் விலையை மட்டுமே அதிகரிப்பது ஏன் என்று மக்கள் அரசிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

மக்களின் இக்கேள்விகளுக்கு பதிலானது மிகவும் எளிதானது. செப்டம்பர் 19 ம் தேதி நிலவரத்தை எடுத்துக்கொள்வோம், இந்தியாவிற்கு வந்து சேரும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையானது 27.74 ரூபாய் ஆகும். இதில் இறக்குமதி விலை, போக்குவரத்துச் செலவு மற்றும் இதர கட்டணங்களும் அடங்கும். இவை மட்டுமல்லாமல் மார்க்கெட்டிங் செலவுகள், வரிகள், லாபம் மற்றும் இதரக் கட்டணங்கள் என்று 2.74 ரூபாய் ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலையுடன் இதையும் சேர்த்தால் 30.48 ரூபாயாக அதிகரிக்கிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையானது 30.48 ரூபாயாக விற்பனையாளரிடம் வந்து சேரும். ஆனால் நுகர்வோரான மக்களிடம் சென்றடையும் போது தான் அதன் உண்மையான வரிகளே விதிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலின் 30.48 என்ற அடக்கவிலையுடன் கலால் வரியாக 21.48 ரூபாயும், விற்பனையாளர் கமிஷனாக 3.57 ரூபாயும், மதிப்புக் கூட்டு வரி(டெல்லியில் 27%) ஆகியவற்றை சேர்த்து 70.52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அனைத்து பெட்ரோலியப் பொருள்களின் நிலையும் இதுவே. எனவே அண்டை நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளது.

அரசு கருவூலத்தை நிரப்ப மக்களின் மீது அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களின் விலைவாசி உயர்வதற்கு காரணமும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வே..!

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button