மாணவர்கள் பட்டம் பெற மரம் நட வேண்டும்|பிலிப்பைன்ஸ் சட்டம் தெரியுமா ?

பரவிய செய்தி

மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு 10 மரங்களை நட வேண்டும் என பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2012-ம் ஆண்டிலேயே பிலிப்பைன்ஸ் நாட்டில் பட்டம் பெறும் மாணவர்கள் மரங்களை நட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

விளக்கம்

நவீனமாகிய இவ்வுலக மக்களால் இயற்கை அளித்த வளங்கள் விரைவாக சுரண்டப்படுகிறது. இன்றைய நாட்களுக்கு ஆடம்பரமாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் இயற்கை அளித்த வளத்தை அழித்து வருகிறோம். குறிப்பாக, மரங்களை வெட்டி காடுகளை அழித்து பிற உயிரினங்கள் வாழ வழி இல்லாமல் செய்து விட்டனர்.

Advertisement

எனினும், சமூக வலைத்தளங்களில் மரம் நட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா ? நடைமுறைக்கு கொண்டு வர வேண்டாமா ? பலரும் தங்களால் முயன்ற அளவிற்கு மரம் நடும் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருந்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் என்பது நிதர்சனம்.

அப்படி மரம் நடுவதை கட்டாயமாக்கி புதிய சட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு இயற்றி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆம், உண்மையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்படியொரு சட்டம் நடைமுறையில் உள்ளது.

பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் வரை படிக்கும் பட்டம் பெறும் மாணவர்கள் மரங்களை நட வேண்டும் என்ற சட்டம் குறித்து மே 13, 2012 ஆம் ஆண்டிலேயே ” Senate Of Philippines ” செய்தி வெளியிட்டு இருந்தது. அந்நாட்டில், பிரைமரி பள்ளியில் 12 மில்லியன், உயர் நிலைப்பள்ளியில் 5 மில்லியன் மற்றும் கல்லூரியில் 5 லட்சம் என மொத்தமாக அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்கள் மூலம் அதிக அளவிலான மரங்களை குறைந்த காலத்திலேயே நட முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதன்படி, சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு மாணவருக்கு 10 மரங்கள் வீதம் ஆண்டிற்கு 175 மில்லியன் புதிய மரங்களை நட முடியும் என்பது அந்நாட்டின் எண்ணமாகும். மேலும், 2011 முதல் 2016-ம் ஆண்டிற்குள் 1.5 பில்லியன் மரங்களை மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் மூலம் நடச் செய்வதை இலக்காக கொண்டிருந்தனர்.

Advertisement

மரங்களின் அவசியத்தை குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் எழுத்துக்களாக வைத்து கற்பிக்காமல் நடைமுறை வாழ்க்கைக்கு மரங்கள் அவசியம் என்பதை எடுத்துரைத்து இதுபோன்ற திட்டங்களை கொண்டு களத்தில் இறங்கி செயல்படவும் வைக்க வேண்டும்.

தமிழகத்திலும் மரங்களை நட்டு வளர்த்து வரும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் உண்டு என்பதை கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். அதனை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தினால் மாணவர்களிடம் இயற்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

பல லட்சம் மரங்களை நடுவது மட்டும் போதுமா ? நடும் மரங்கள் செழிப்பாக வளர்கிறதா என்பதையும் கண்காணித்து பராமரிப்பதும் மிக அவசியம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button