இது பீனிக்ஸ் பறவையா ? | வதந்திக்கும் அளவில்லையா !

பரவிய செய்தி
இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று.
மதிப்பீடு
விளக்கம்
பீனிக்ஸ் பறவையின் ஆச்சரியமான கதைகள் பற்றிக் கேட்டறிந்து இருப்போம். ஆகையால், பீனிக்ஸ் பறவை உருவத்தை பலரும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கி இருப்பர்.
ஆனால், பீனிக்ஸ் பறவையை யாரும் பார்த்ததில்லை. அவை கற்பனையா ? அல்லது உண்மையானவையா என்ற சர்ச்சை இருந்து வருகிறது.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று எனப் பதிவிட்டு பல ஷேர்களையும் பெற்றது.
அவ்வாறு பதிவிட்ட பறவையின் உருவம் பீனிக்ஸ் அல்ல, “ Thunder bird “ என அழைக்கப்படுபவை. அவையும் நிஜமல்ல.
மாயாஜாலங்கள் நிறைந்த “ Fantastic beasts and where to find them “ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் பறவையின் உருவமாகும். அத்திரைப்படத்தில் பிரம்மாண்டமாக வரும் Thunder bird-ன் தோற்றத்தில் பொம்மைகள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
2008 ஆம் ஆண்டில் இருந்து உயிரினங்களின் தோற்றத்தில் கலை பொருட்களைச் செய்து வரும் ரஷ்யாவைச் சேர்ந்த “ Ekaterina Gakman “ என்ற பெண் “ Gakman creatures “ என்ற பெயரில் Thunder bird உருவில் பொம்மையை விற்பனை செய்வதாக வெளியிட்டு உள்ளார்.
அதில் வெளியிட்ட புகைப்படமே தற்போது பீனிக்ஸ் பறவை என பரவி வருகிறது. Faux fur, polymer clay, pastels கொண்டு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இந்த Thunder bird பொம்மையின் விலை 700 அமெரிக்க டாலர்கள்.
பீனிக்ஸ் பறவை என தவறுதலாக வெளியிட்ட பதிவில் என்ன இருக்கிறது என கூறுவர். இவ்வாறான புரிதல் இல்லாமல் பரப்பும் செய்திகள் தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி கிடக்கின்றன.
Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .