அரவிந்த் கெஜ்ரிவால் வில் அம்பை தலைகீழாக பிடித்ததாக பரப்பப்படும் ஃபோட்டோஷாப் படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
2022 அக்டோபர் 5ம் தேதி செங்கோட்டை திடலில் லவ் குஷ் ராம்லிலா(Lav Kush Ramlila Committee) எனும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ராவணன் தாஹான்(Ravana dahan programme) எனும் மத நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
அந்நிகழ்வில் அரவிந்த் கெஜ்ரிவால் அடையாளத்திற்காக வில் ஒன்றை எய்தார். அதில் வில் அம்பை தலைகீழாகப் பிடித்துள்ளார் எனப் பாஜக, அதிமுக மற்றும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
उल्टा तीर , केजरी को ठान्से
उल्टा चोर कोतवाल को डाँटेदोनों कहावतें 👌 FIT हैंगी 😂😝 pic.twitter.com/BLVfyRbI6i
— Yogi Vishalanand (Baba Boys Hostel, Lucknow) (@yogivishalnand6) October 11, 2022
आज के अधर्मी रावण को यह भी नहीं पता बाण कैसे पकड़ा जाता है
ये खुद समाप्त होना चाहते हैं 😂😂😂😂 एक नंबर का गधा कहीं का 😀😀 pic.twitter.com/whU9t5G57q— सनातनी जगदीश दुबे (@JAGDISH73187314) October 9, 2022
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை நன்கு கவனித்தாலே அது டிஜிட்டல் முறையில் ஃமார்ப் செய்யப்பட்டுள்ளது என்பது நன்றாகத் தெரிய வரும். அரவிந்த் கெஜ்ரிவாலின் பக்கத்தில் இருப்பவரின் முகம் ஃமார்ப் செய்யப்பட்டதில் கலங்கி உள்ளது.
மேலும், வைரலான புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியபொழுது நவபாரத் டைம்ஸ் எனும் செய்தித்தளத்தின் அதிகாரப்பூர்வ யூடுயூப் பக்கத்தில் இந்நிகழ்வின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 15 நிமிட நீளம் கொண்ட வீடியோவில் 1.06 நிமிடத்தில் வில் எய்தும் நிகழ்வு நடந்துள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் வில் அம்பு இரண்டையும் சரியான நிலையில் பிடித்திருப்பது நமக்குத் தெரிய வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்தான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலும், வில் அம்பை அவர் நேராகப் பிடித்திருப்பதை நம்மால் காண முடிகிறது.
जिस तरह मर्यादा पुरुषोत्तम प्रभु श्री रामचंद्र जी ने रावण का वध किया था, उसी तरह हम सबको मिलकर देश और समाज में फैली रावण रूपी बुराईयों का अंत करना है।
जय श्री राम। 🙏 pic.twitter.com/Zfg0F6nhFt
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 5, 2022
சமீபத்தில், குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துப் பல்வேறு வதந்திகள் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகளால் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு:
நம் தேடலில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வில் அம்பை தலைகீழாகப் பிடித்திருந்தார் எனப் பரப்பப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.