மாற்றுத்திறனாளிகளுக்கு இம்போர்ட்டட் வீல்சேர் வழங்குவதாக வதந்தி !

பரவிய செய்தி
40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் வீல்சேர் மற்றும் ட்ரை சைக்கிள்… மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
2019 ஏப்ரல் 26-ம் தேதி எஸ்.வி சேகர் முகநூல் பக்கத்தில், ” 40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் வீல்சேர் மற்றும் ட்ரை சைக்கிளை மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது” அதற்கான லிங்க் ஒன்றையும் இணைத்து பதிவிடப்பட்டது.
இந்த தவறான தகவலை மாற்றுத்தினாளிகள் யாரும் நம்ப வேண்டாம் என மாற்றினாளி நண்பர்களுக்கான அமைப்பான Dec 3 இயக்கத்தின் பேராசிரியர் தீபக் தன் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டு உள்ளார்.
** ஊடகங்கள் பார்வைக்கு **
கடந்த சில நாட்களாக, 40 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலி சென்னைக்கு அருகில் மூட்டுகாடு என்கிற இடத்தில் உள்ள NIEPMD நிறுவனத்தால் வழங்கப்படுவதாக ஒரு செய்தி வாட்ஸ்அப்பிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இது உண்மைக்கு புறம்பான செய்தி” நிப்மெட்” என்கிற நிறுவனம் சென்னைக்கு அருகில் , ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் இருக்கக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக, அறிவியல் பூர்வமான யுக்திகள் மூலம் சேவை செய்து வருகிற ஒரு தேசிய நிறுவனம் இது மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அதாவது சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் மூலம் இயங்கி வரும் தேசிய நிறுவனமாகும்.
இதில் உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்ற திட்டம் இருக்கிறதே, தவிர 40 ஆயிரம் ரூபாய் இணையான தானியங்கி வசதி உள்ள சக்கர நாற்காலிகள் (Automatic wheel or motorized wheel chair) வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசிடமோ அல்லது அந்த அமைச்சகத்திடமோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வருகின்ற எந்த ஒரு தேசிய நிறுவனங்களிடமும் இல்லை என்பதுதான் உண்மையான நிலை.
இச்செய்தியை ,பல பொதுமக்கள் நல்லெண்ணத்துடன் “இது ஏதாவது ஒரு மாற்றுத் திறனாளிக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று எண்ணம் கொண்டு, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் பல மாற்றுதிறனாளிகள் இச் செய்தி உண்மை என்று நம்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பி ஏமாறும் சூழல் உருவாகிறது வருகிறது என்பது வேதனையளிக்கிறது.
ஆகவே இப்பொய்ச் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள்விடுக்கிறோம். ஊடகங்களும் பத்திரிக்கை நண்பர்களும், இதை தயவு செய்து உங்கள் தகவலாக செய்திகளில் ஒளிபரப்பி அல்லது கருத்து வடிவமாக செய்திகளில் அச்சிட்டு மாற்றுத்திறனாளிகளின் ஏமாற்றத்திற்கு ஒரு முடிவு கொண்டுவர வேண்டும் என்று டிசம்பர் 3 இயக்கம் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறது.
பேராசிரியர் தீபக்
டிசம்பர் 3 இயக்கம் 27/05/2019
எனவே, பரவிய செய்தியை உண்மை என மாற்றுத்திறனாளி நண்பர்கள் நம்ப வேண்டாம். உண்மை செய்தியை பகிரவும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.