விமானத்தில் உள்ள புலி முகத்தை சிவிங்கிப் புலி எனச் செய்தி வெளியிட்ட வலதுசாரி ஊடகம்.. இது 2015ல் வரைந்தது !

பரவிய செய்தி

சிவிங்கிப் புலிகளை நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்காகவே விமானத்தில் சிவிங்கி புலியின் முகம் வரையப்பட்டு உள்ளது.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

1952ம் ஆண்டு இந்தியாவில் இருந்து முற்றிலுமாக அழிந்த சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்திய வனப்பகுதிகளில் விட நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டது. இவை பிரதமர் நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.

Advertisement

இந்நிலையில், சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்ட விமானத்தில் சிவிங்கிப் புலியின் முகத்தை வரைந்து உள்ளதாக வலதுசாரி வடஇந்திய ஊடகமான சுதர்சனில் வெளியிடப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து குவாலியர் விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானம் (போயிங் 747) மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த விமானத்தில் பல ஆண்டுகளாகவே புலியின் முகம்(சிவிங்கிப் புலி அல்ல) வரையப்பட்டுள்ளது.

இதைப் பற்றிப் பல வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. தற்போது செயல் இழந்த ரஷ்யாவின் ட்ரான்ஸ்பேரோ(Transaero) விமானச் சேவை நிறுவனம் இந்தப் போயிங் 747-400 விமானத்தில் புலி முகத்தை வண்ணம் தீட்டி வெளியிட்டது என 2015ம் ஆண்டில் இருந்து பல செய்திகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

2015ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி Aviation buzzword எனும் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் விமானத்தில் புலி முகம் வரையப்படும் வீடியோ இடம்பெற்று உள்ளது.  இவை சைபீரியா பகுதிகளில் உள்ள ஆமூர் புலிகளைக் காப்பாற்ற விழிப்புணர்வுக்காகச் செய்யப்பட்டது.

இந்த விமானம் ஜூன் 2012 இல் இருந்து மே 2021 வரை ட்ரான்சாரா விமான நிறுவனத்திடம்(Transaero Airlines) இருந்தது. பின்பு அமெரிக்காவை சேர்ந்த TVPX Trust Services-ஆல் வாங்கபட்டது. தற்போது இந்த விமானம் மார்ச் 2022ல் இருந்து Maldova’s Terra Avia என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது.

சிவிங்கிப் புலிகளை நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வர இந்தக் குறிப்பிட்ட விமானத்தைப் பயன்படுத்தியது தற்செயலாக அல்லது தெரிந்தே கொண்டு வரப்பட்டதாகத் தெரியவில்லை. எதுவாயினும் இந்த விமானம் இந்தக் குறிப்பிட்ட தருவைக்காக வரையப்படவில்லை.

முடிவு :

நம் தேடலில், இந்த விமானத்தில் உள்ளது புலியின் முகம், சிவிங்கப் புலி அல்ல, இது 2015ஆம் ஆண்டே வரையப்பட்டு விட்டது. இப்போது சிவிங்கி புலிகள் கொண்டு வரும் பயணத்திற்காக வரையப்படவில்லை என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button