குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்..! தகவலை வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை.

பரவிய செய்தி

உலகின் முன்னணி பிராண்ட்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

அமெரிக்காவை சேர்ந்த orb media நடத்திய ஆய்வில் Bisleri, Nestle pure Life ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களில் அதிகளவில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

“ நீரின்றி அமையாது உலகு ” என்ற வரிகள் வருங்காலத்தை அறிந்தே எழுதப்பட்டவை. இன்றைய காலக்கட்டத்தில் நீரின் தேவையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதேசமயம் நீர் சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடே குடிநீர் பாட்டில்.

Advertisement

சர்வதேச சந்தையில் குடிநீர் பாட்டில்களின் விற்பனை ஆண்டிற்கு 147 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே உகந்தது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் பிளாடிக் துகள்கள் இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த லாபநோக்கமற்ற பத்திரிகை நிறுவனமான orb media நடத்திய ஆய்வில் ஒரு குடிநீர் பாட்டிலில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி குடிநீர் பாட்டில் நிறுவனங்களில் இருந்து 250 பாட்டில்களை பரிசோதனை செய்ததில் பாலிப்ரோபலீன், நைலான், பாலி எத்திலீன் டெரப்தலேட்(PET) உள்ளிட்ட பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் orb media நடத்திய ஆய்வில் தோராயமாக ஒரு லிட்டருக்கு 10.4 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சோதனைக்குட்படுத்திய சில பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் ஏதுமில்லை. ஆனால், ஒரு சில பாட்டில்களில் 10,000 நுண்ணிய துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்களுக்கு நாள் ஒன்றிற்கு 4,000 குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Orb media வெளியிட்ட தகவல் குறித்து இரு முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், Orb media-வின் அளவுகள் பெரிதாகக் காண்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

Advertisement

Aqua , Aquafina, Bisleri , Dasani , Epura, Evian , Gerosteiner, Minalba, Nestle pure life, San Pellegrino, Wahaha உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களில் இருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ளனர். அதில், இந்திய நிறுவனமான Bisleri-ல் அதிகபட்சமாக 5,230/லிட்டர் மற்றும் Nestle pure Life-ல் 10,390/லிட்டர் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழாய் நீர் சுகாதாரமற்றது என்று நினைத்து குடிநீர் பாட்டில்கள் அதிகம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், குடிநீர் பாட்டில்களில் கூட பிளாஸ்டிக் போன்ற மாசு துகள்கள் கலந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உலகில் சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்களால் தினந்தோறும் 4,000 குழந்தைகள் மரணிக்கின்றனர் என்பதை தாண்டி, இது போன்ற தகவல்களை அறிந்தும் இவற்றால் ஒரு தீமையும் இல்லை என்ற மனப்பாங்கு மக்களிடையே உள்ளது என்பது வேதனை அளிக்கின்றது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button