பிரதமர் மோடி அணியும் உடைகள் அரசு பணத்தில் இல்லையா ?| RTI தகவல்.

பரவிய செய்தி

மோடி அணியும் உடைக்கான செலவு அரசு பணம் அல்ல என தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்.

மதிப்பீடு

சுருக்கம்

2018 ஜனவரில் ரோஹித் சபர்வால் என்பவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், பிரதமரின் தனிப்பட்ட உடை செலவுகள் அரசு கணக்கில் வராது என குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

பிரதமர் மோடியின் உடைக் குறித்த சர்ச்சை இன்று நேற்று இல்லை அவரின் பெயர் பொறித்த கோட் 10 லட்சம் ரூபாய் என செய்திகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே ஆரம்பித்து. பிரதமர் மோடியின் ஆடைக்காக அதிகம் அளவில் அரசு பணம் செலவிடப்படுகிறது என எதிர்க் கட்சிகள், பொதுமக்களும் குற்றம்சாட்டினர்.

Advertisement

எனினும், பிரதமரின் உடைகளுக்கான செலவுகள் பற்றிய சர்ச்சைகளுக்கு அக்கட்சியோ அல்லது பிரதமர் அலுவலகமோ சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையில், சமூக ஆர்வலரான ரோஹித் சபர்வால் பிரதமரின் உடைக்கான செலவுகள் குறித்த தகவலுக்கு டிசம்பர் 9, 2017-ல் ஆர்.டி.ஐ தாக்கல்  செய்து இருந்தார்.

அதில், மார்ச் 19, 1998 முதல் 22 மே 2004 வரையில் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலும், மே 22, 2004 முதல் மே 26, 2014 இடைப்பட்ட மன்மோகன்சிங் ஆட்சியிலும்,  மே 26, 2014  தொடங்கி இன்று வரையிலான நரேந்திர மோடி ஆட்சி என ஆண்டு விலாவாரியாக பிரதமரின் உடைக்கான செலவு பற்றி தகவல் கேட்டு இருந்தார்.

இதற்காக பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், ” கேள்வியானது தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டது மற்றும் இதற்கான தகவல்கள் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இல்லை ” எனக் கூறியதாக ” டைம்ஸ் நவ் ” வெளியிட்ட ஜனவரி 2018 செய்தியில் உள்ளது.

” மேலும், பிரதமரின் தனிப்பட்ட உடைக்கான செலவுகள் அரசின் கணக்கில் வராது என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது “.  

Advertisement

பிஜேபியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜீவன் குப்தா கூறுகையில், ” பிரதமரின் உடைக் குறித்த எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ தகவல் சரியான பதிலை அளித்துள்ளது. நாட்டின் பிரதமர் நல்ல உடை அணிவதில் தவறு ஒன்றும் இல்லை, அவர் இந்தியாவின் அடையாளம் ஆவார். பிரதமருக்காக பிரத்யேகமாக வடிவமைப்பு செய்யப்பட்ட கோட் ஏலத்தில் விடப்பட்டது மற்றும் அந்த தொகை தூய்மை இந்தியா திட்டத்திற்கு அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.

பிரதமர்களின் உடைகளுக்கான செலவு என்பது அவர்களின் தனிப்பட்டது மற்றும் அதற்கான தகவல்கள் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இல்லை எனக் கூறியுள்ளனர். இது 1998 முதல் தற்போது வரை உள்ள பிரதமர்களின் உடைக்கான செலவு குறித்த கேள்வியில் வெளியான தகவல்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button