பிரதமர் மோடி அணிந்திருப்பது ஆன்லைனில் விற்பனையாகும் பெண்களுக்கான உடையா ?

பரவிய செய்தி

டிசைன் நல்ல இருக்கு என்று எடுத்து போட்டு இருப்பார் போல….! இந்த ஆடையின் பெயர் என்ன….???

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அணிந்து வந்த உடை ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கப்படும் பெண்களுக்கான உடை எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

” Multi Floral Embroidered Dress ” என்ற தலைப்பில் 35 டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்யப்படும் பெண்களுக்கான உடையை தான் பிரதமர் மோடி அணிந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் இப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

Archive link 

உண்மை என்ன ?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய உடை அணிவது வழக்கம். வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் பிரதமர் மோடியின் தலையில் இறகுகளை கொண்ட தொப்பி அணிந்து இருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போது இவ்வாறான தோற்றத்தில் மோடி சென்றாரா எனத் தேடினோம்.

Twitter link | Archive link

2022 டிசம்பர் 18ம் தேதி NDTV செய்தியில், ” பிரதமர் மோடி மேகாலயா மாநிலத்தின் பாரம்பரிய உடையில் இருப்பதாக ” முழுமையான படத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த முழுமையான படத்தில், மோடி அணிந்து இருப்பது பெண்கள் அணியும் உடை போன்று இல்லை, பாரம்பரிய உடை போன்றே உள்ளது.

பிரதமர் மோடி அணிந்து இருக்கும் உடை குறித்து தேடுகையில், மேகாலயா மாநிலத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற போது பிரதமர் மோடி காஸி பாரம்பரிய உடையையும், பாரம்பரிய காரோ தொப்பியையும் அணிந்து இருந்ததாக ” இந்தியா டிவி என்ற செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படங்களில், பிரதமர் மோடி அணிந்து இருக்கும் பாரம்பரிய உடையும், விற்பனை இணையதளத்தில் உள்ள பெண்ணின் உடையும் ஒரே மாதிரியாக மணி மற்றும் அமைப்புகளில் இருப்பதை காணலாம். இதிலிருந்து பிரதமர் அணிந்து இருந்த உடையை மட்டும் எடுத்து உடை விற்பனை தளத்தில் உள்ள பெண்ணின் படத்தில் எடிட் செய்து இருப்பதை அறிய முடிகிறது.

மேற்கொண்டு தேடுகையில், உடைகள் விற்பனை செய்யும் தளம் ஒன்றில் ” Multi Floral Embroidered Dress ” என்ற தலைப்பில் 35 டாலர்கள் மதிப்பில் வைரல் செய்யப்படும் உடையின் உண்மையான புகைப்படமும் கிடைத்தது.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி அணிந்திருக்கும் உடை ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கப்படும் பெண்களுக்கான உடை எனப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. பிரதமர் மோடி அணிந்து இருப்பது மேகலாயாவின் பழங்குடியின மக்களின் பாரம்பரிய காஸி உடை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader