பிரதமர் மோடியை மனிதனாக இருங்கள் எனக் கூறும் ஃபோட்டோஷாப் பதாகையுடன் பரவும் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
” திரு. நரேந்திர மோடி, இந்தியர்களுக்கு ஹிந்து-முஸ்லிம் நாடகம் தேவையில்லை, எங்களுக்கு தடுப்பூசி, படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை! மனிதனாக இருங்கள் ” எனும் வாசகம் இடம்பெற்ற பதாகை உடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜே சேர்ச் செய்கையில், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை தாக்குதல் தொடர்பாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் இப்புகைப்படம் சஹானா சிங் எனும் ட்விட்டர் பக்கத்தில் மே 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
My solidarity with Hindus of West Bengal (mostly from poor communities) being targeted brutally by ruling TMC after winning elections. Over 400 fled to Assam after they witnessed killings, rapes, looting. Some 100,000 are homeless. Criminals must be punished #MamataStopViolence pic.twitter.com/cHvlIqoiJS
— Sahana Singh (@singhsahana) May 9, 2021
இந்த புகைப்படத்தில் ஃபோட்டோஷாப் செய்து யாரோ சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் எனத் தெரிந்தும், அதில் உள்ள வார்த்தை சரியானது எனக் கமெண்ட் செய்து தெரிந்தே பலரும் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.