பிரதமர் மோடி ஒரே நாளில் 4 தலைவர்களை சந்திக்க வெவ்வேறு உடை அணிந்தாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஒரே நாளில் பாஜக தலைவர்கள் நான்கு பேரை சந்தித்த பிரதமர் மோடி வெவ்வேறு உடையை அணிந்து இருந்ததாக கூறி பிரதமர் நரேந்திர மோடி 4 தலைவர்கள் உடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இப்புகைப்படங்களின் தொகுப்புகள் ஜூன் 12-ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 11-ம் தேதி பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது. யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்திலும் இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met PM @narendramodi. pic.twitter.com/RMyYKf0BlR
— PMO India (@PMOIndia) June 11, 2021
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் மற்ற புகைப்படங்கள் குறித்து தேடுகையில், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் நஜ்மா ஹேப்துல்லாவை பிரதமர் சந்தித்ததாக மூன்றாவதாக உள்ள புகைப்படம் ஜூன் 10-ம் தேதி பதிவாகி இருக்கிறது.
Manipur Governor @nheptulla Ji called on PM @narendramodi. pic.twitter.com/NumZx89gpe
— PMO India (@PMOIndia) June 10, 2021
உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அவர்களை பிரதமர் மோடி சந்தித்ததாக நான்காவதாக உள்ள புகைப்படம் ஜூன் 7-ம் தேதி ட்விட்டரில் பதிவாகி இருக்கிறது.
Uttarakhand CM Shri @TIRATHSRAWAT called on PM @narendramodi. pic.twitter.com/Cuue9PXTFJ
— PMO India (@PMOIndia) June 7, 2021
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பீஸ்வா அவர்களை பிரதமர் மோடி சந்தித்ததாக ஜூன் 2-ம் தேதி பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவதாக உள்ள புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
Assam Chief Minister Shri @himantabiswa called on PM @narendramodi. @CMOfficeAssam pic.twitter.com/u1hGTHMSDV
— PMO India (@PMOIndia) June 2, 2021
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி ஒரே நாளில் 4 பாஜக தலைவர்களை சந்திக்க வெவ்வேறு உடையில் வந்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானது. 3 மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர் ஒருவரை வெவ்வேறு நாட்களில் பிரதமர் மோடி சந்தித்த புகைப்படங்களை ஒரே நாளில் எடுத்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.