பிரதமர் மோடி குடும்பத்தினரின் தொழில் குறித்து பரவும் தகவல் உண்மையா ?

பரவிய செய்தி

~குடும்ப அரசியல் ஆதாயம் என்றால் என்ன ??!!

Facebook archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதர்கள், நெருங்கிய உறவினர்கள் செய்யும் தொழில், அவர்கள் வகிக்கும் பதவிகள், வேலைகள் இதுதான் எனப் நீண்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகச் சுற்றித் திரிகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

2016-ம் ஆண்டு இந்தியா டுடே ” The other Modis ” எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் சகோதரர்களின் வாழ்க்கை குறித்த விரிவான செய்தியை வெளியிட்டு இருந்தது. அதில், சோமபாய் மோடி, அம்ரூத்பாய் மோடி, அரவிந்த் மோடி, பாரத் மோடி உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியின் அரசியல் மற்றும் செல்வாக்கு வட்டத்தில் இருந்து விலகி இருப்பதாகவும், அவர்களின் தொழில் மற்றும் சாதாரண வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த கட்டுரையை இந்தியா டுடேவின் முன்னாள் துணை ஆசிரியர் உதய் மஹூர்கர் எழுதி இருந்தார். அவர் தற்போது இந்திய அரசால் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் உறவினர்கள் குறித்து பரவும் தகவலை குறிப்பிட்டுத் தவறான தகவலை பரப்புவதாக தாம் எழுதிய கட்டுரையை இணைத்து ட்வீட் செய்து உள்ளார்.

Archive link 

Deshgujarat எனும் செய்தி இணையதளத்தில் பிரதமர் மோடியின் உறவினர்கள் குறித்து பரவும் தகவலை முற்றிலுமாக மறுத்து தவறான தகவலை பரப்புவதாக செய்தி வெளியிட்டு இருந்தனர்.

பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் சோமபாய் மோடி குஜராத்தில் பணிநியமன வாரியத்தின் தலைவராக இருப்பதாக கூறும் கூற்றில் உண்மையில்லை. ஏனெனில், வெறுமெனே பணிநியமன வாரியம்(recruitment board) என்றேக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கும் எந்த பணிநியமன வாரியத்தின் தலைவர் எனக் குறிப்பிடவில்லை. அவர் குறித்து தேடும் பொழுது அப்படி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

மற்றொரு மூத்த சகோதரரான அம்ரூத் மோடி அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என எந்தவொரு ஊடகச் செய்தியிலோ அல்லது ரியல் எஸ்டேட் இணையதளங்களிலோ இடம்பெறவில்லை.

இளைய சகோதரர் பிரகலாத் மோடி அகில இந்திய நியாயமான விலை கடை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளதாக 2019 நவம்பரில் வெளியான தி பிரிண்ட் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது. அவர் ஷோரூம் உரிமையாளர் என எந்தவொரு தகவலும் இல்லை.

” எனக்கு தெரிந்தவரை பிரதமர் மோடியின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் சொந்தமாக ஷோரூம் நடத்தவில்லை ” என அகமதாபாத் நகரை மையமாகக் கொண்ட மாருதி ஷோரூமின் முன்னாள் சிஇஓ கூறியதாக ஆல்ட் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது.

மற்றொரு இளைய சகோதரர் பங்கஜ் மோடி பணிநியமன வாரியத்தின் துணைத் தலைவராக இருப்பதாக கூறுவதும் தலைவராக சோமபாய் மோடி இருப்பதாக கூறியது போன்றதே. அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

போகிலால் மோடி ரிலையன்ஸ் மால் உரிமையாளராக இருப்பதாகக் கூற்றில் உள்ளது. ஆனால், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் துணை நிறுவனமே ரிலையன்ஸ் மால். தனிநபர்களால் ரிலையன்ஸ் மாலை சொந்தமாக வைத்திருக்க முடியாது. அதேபோல், அசோக்பாய் மோடி போகிலால் மோடியுடன் இணைந்து ரிலையன்ஸ் மாலை இயக்கி வருவதாக கூறுவதும் தவறானது.

இதேபோல், மற்ற உறவினர்களின் தொழில் குறித்து கூறப்பட்டுள்ள கூற்றிற்கு ஆதாரமோ, விவரமோ அளிக்கப்படவில்லை. ஆதாரமற்ற தகவல்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் இருதரப்பினரும் பரப்புவதை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மாற்றி மாற்றி வதந்தியையும், அவதூறுகளையும் பரப்புவதால் எது உண்மையான தகவல் என மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க : பாஜகவிலும் தலைவிரித்தாடும் வாரிசு அரசியல் !

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்து முன்பு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஆனால், பிரதமர் மோடியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் பற்றி பரப்பப்படுவது முற்றிலும் தவறானது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button