இத்தாலியில் பிரதமர் மோடி வாடகை டாக்சியில் அழைத்து செல்லப்பட்டாரா ?

பரவிய செய்தி
8000 கோடி விமானத்தில் வந்த விஷ்வ குருவை Taxi வைத்து அழைத்து சென்ற இத்தாலி அரசை கண்டிக்கிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இத்தாலி அரசு வாடகை டாக்சியில் அழைத்து சென்றதாக காரில் இருந்து பிரதமர் மோடி இறங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இத்தாலியின் ரோம் நகரில் அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள சென்றிருந்தார். அந்த பயணத்தில், வாடிகனில் போப் பிரான்சிசை இந்திய பிரதமர் சந்தித்தும் இருந்தார்.
இந்தியப் பிரதமரின் இத்தாலி பயணத்தில் அவருக்கு பயன்டுத்தப்பட்ட வாகனம் ஒரு வாடகை டாக்சி என்று வாகனத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்கும் புகைப்படம் மற்றும் வாகனத்தின் பின்புற புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் ஏஎன்ஐ செய்தி முகமையின் லோகோ இருப்பதை வைத்து அந்த செய்தி சேனலின் பதிவுகளில் தேடுகையில், அக்டோபர் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாடிகனில் போப் பிரான்சிசை சந்திக்க சென்றதாக வெளியான செய்திகளில் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது.
Prime Minister Narendra Modi departs from the Vatican after his meeting with Pope Francis pic.twitter.com/KXdOyKvPSA
— ANI (@ANI) October 30, 2021
PM Modi had a very warm meeting with Pope Francis at the Vatican. The meeting was scheduled only for 20 minutes but went on for an hour. PM & the Pope discussed a wide range of issues aimed at making our planet better such as fighting climate change &removing poverty: Sources pic.twitter.com/OdVYMkAuq1
— ANI (@ANI) October 30, 2021
ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடி இறங்கும் வாகனத்தின் புகைப்படங்களில் டாக்சி என இடம்பெற்றவில்லை. அது போலியாக எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், இத்தாலி நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வாடகை டாக்சி வாகனத்தில் அழைத்து சென்றதாக பரப்பப்படும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்ட போலியானது என அறிய முடிகிறது.