ஜப்பான் சென்ற பிரதமர் மோடி படத்தில் அதானி முகத்தை எடிட் செய்து சன் நியூஸ் வெளியிட்டதா ?

பரவிய செய்தி

டோக்யோ சென்றடைந்தார் பிரதமர்! அதானி படத்தை வைத்து நியூஸ் கார்டு வெளியிட்ட சன் நியூஸ்.

மதிப்பீடு

விளக்கம்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி டோக்கியோ சென்ற செய்தியில் மோடியின் தலைக்கு பதிலாக கெளதம் அதானியின் தலையை வைத்து எடிட் செய்து சன் நியூஸ் வெளியிட்டதாக இந்த நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ?

கடந்த ஜூலை 8ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய போது ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஷின்சோ அபேவிற்காக செப்டம்பர் 27-ம் தேதி ஜப்பான் நாட்டில் அரசு மரியாதையுடன் நடைபெறும் நினைவு சடங்கில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றார்.

Facebook link  

பிரதமர் மோடி ஜப்பான் சென்றது தொடர்பாக சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில், ” ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, டோக்யோ சென்றடைந்தார் பிரதமர் மோடி ” என நரேந்திர மோடி அவர்களின் படத்தையே சன் நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.

மேற்காணும் சன் நியூஸ் கார்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக அதானியின் படத்தை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதை சன் நியூஸ் சேனலே எடிட் செய்து வெளியிட்டதாக கிண்டல் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க :  உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

இதேபோல், கடந்த ஆண்டு உருமாறிய கொரோனா செய்திக்கு பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை வைத்து சன் நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜப்பான் தலைநகர் டோக்யோ சென்ற பிரதமர் மோடி குறித்த நியூஸ் கார்டில் அதானியின் தலையை எடிட் செய்தது சன் நியூஸ் சேனல் இல்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader