பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸில் விளம்பரம் வெளியானதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தில், காணவில்லை. இந்தியாவின் பிரதமர், கங்கையின் மகன் என்றும் அழைக்கப்படுவார். பிரதான் சேவக் என்றும் அழைக்கப்படுகிறார். விளக்கம் – மார்பு 56 அங்குலம், நீண்ட வெள்ளை தாடி. பெரிய தொழிலதிபர்களின் நிறுவனத்தில் காணப்படுவதாக அறியப்படுகிறது. மயிலை நேசிப்பவர் ” என பிரதமரின் புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
இதுகுறித்து தேடுகையில், மே 7ம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் பக்கங்கள் epaper.hindustantimes.com தளத்தில் வெளியாகி இருக்கிறது. உண்மையான செய்தித்தாள் பக்கத்தில் ” பிரதமர் மோடியை காணவில்லை ” என வெளியான இடத்தில் ” COURT A PUBLIC SPACE, COVERAGE PART OF FREEDOM OF SPEECH, SAYS SC ” என்ற தலைப்பில் வெளியான செய்தியே இடம்பெற்று உள்ளது.


மே 13-ம் தேதி Outlook india செய்தி நிறுவனம், ” இந்திய அரசை காணவில்லை ” எனும் கவர் படத்தை வெளியிட்டது. அந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
!!!#OLMag | Latest Outlook cover evaluates ModiGovt@7, featuring articles by some of the best known voices- @pbmehta @ShashiTharoor @MahuaMoitra @manojkjhad @vijai63
Out on the stands soon.
Please subscribe: https://t.co/BIlYUhT7Yh pic.twitter.com/AIMu5pmJfT— Outlook Magazine (@Outlookindia) May 13, 2021
அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் பிரதமர் மோடியை காணவில்லை என வெளியாகியதாக எடிட் செய்த படத்தை பரப்பி இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளில் விளம்பரம் வெளியானதாக பரவும் செய்தித்தாள் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.