பிரதமர் மோடி தன் தாயின் அஸ்தியை கரைக்க கேமராமேன் உடன் சென்றதாகப் பரவும் பழைய வீடியோ

பரவிய செய்தி

தன் தாயுடைய அஸ்தியை கரைக்க இடுப்பளவு தண்ணீரில் பயமில்லாம தனியா போறாரே மனசுக்குள்ள அவ்வளவு விரக்தியா பாவம்னு பீல் பண்ணாதீங்க இந்தாளுக்கு முன்னாடி கழுத்தளவு தண்ணீரில் ஒருத்தன் கேமராவை தலையில தூக்கி வச்சுக்கிட்டு போறான் அவன்தான் பாவம்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2022 டிசம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி தனது தாயின் அஸ்தியை நதியில் கரைக்க இடுப்பளவு தண்ணீரில் செல்லும் போது, கழுத்தளவு தண்ணீரில் ஒருவர் கேமரா உடன் செல்வதாக 45 நொடிகள் கொண்ட இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Facebook link

உண்மை என்ன ? 

பிரதமர் மோடி தன் தாயின் அஸ்தியை கரைக்க புகைப்பட கலைஞர் உடன் சென்றதாக பரப்பப்படும் வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” அந்த வீடியோவில் இடம்பெற்ற பிரதமர் மோடி கையில் கலசத்துடன் இருக்கும் காட்சியின் புகைப்படம் கடந்த 2021 டிசம்பர் 13ம் தேதி ஹிந்துதான் டைம்ஸ் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது”.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைத்த போது பிரதமர் மோடி கங்கை நதியில் நீராடிய வீடியோ இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

2021 டிசம்பரில் வாரணாசிசென்ற பிரதமர் மோடி கங்கை நதியில் புனித நீராடிய போது எடுக்கப்பட்ட வீடியோவையே தற்போது அவரின் தாயின் மறைவிற்கு பின் எடுத்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

Twitter link 

மேலும் படிக்க : கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?

மேலும் படிக்க : கழிவறைக்கு உள்ளேயும் கேமராமேனை அழைத்துச் சென்றாரா பிரதமர் மோடி ?

முடிவு :

நம் தேடலில், பிரதமர் மோடி தன் தாயின் அஸ்தியை கரைக்க இடுப்பளவு தண்ணீரில் செல்லும் போது புகைப்பட கலைஞரையும் அழைத்துச் சென்றதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அது கடந்த 2021ம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறப்பு விழாவின் போது கங்கையில் நீராடிய வீடியோ என அறிய முடிகிறது.  

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader