This article is from Sep 30, 2021

பிரதமர் மோடியின் ஃபோட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்ட பீட்டர் அல்போன்ஸ் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய உடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுவதை பார்வையிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. குறிப்பாக, பிரதமர் மோடி மாஸ்க்கை கழட்டி விட்டு நடந்து வரும் போது கீழே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் வைரல் செய்யப்பட்டது.

Facebook link 

புகைப்படக் கலைஞர் எப்படி இந்த புகைப்படத்தை எடுத்து இருப்பார் எனக் காண்பிக்கும் வகையில் பிரதமர் மோடியின் புகைப்படமும், கீழே ஒருவர் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படமும் இணைக்கப்பட்டு ட்ரோல் மீம் வைரலாகியது.

இந்நிலையில், அதேபோன்ற இரு புகைப்படங்களை ஃபோட்டோஷாப் மூலம் ஒன்றிணைத்த புகைப்படம் ஒன்றும் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி நடந்து வருவதை படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பது போன்று பீட்டர் அல்போன்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader