பிரதமர் மோடிக்கே ஃபோட்டோஷாப் செய்திகள்.. அரசியல் பகடி வேலை !

பரவிய செய்தி
தமிழ்நாட்டை உத்திர பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணியை ஆதரிப்பீர் – பிரதமர் மோடி
தாராபுரத்தில் பிரதமர் மோடி பரப்புரை !. 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள். தாமரை மலர்ந்தே தீரும்.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்து தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அத்தகைய தேர்தல் பரப்புரையில், ” தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணியை ஆதரிப்பீர் ” என மோடி பேசியதாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
நஜீர் அலி என்பவரின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த நியூஸ் கார்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால், தமிழகத்தை உத்தரப் பிரதேசம் போல் மாற்றுவோம் என மோடி கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது.
இதுகுறித்து, புதிய தலைமுறை செய்தியின் இணையதள பிரிவை தொடர்பு கொண்டு கேட்ட போது, இது போலியானது என உறுதிப்படுத்தி உள்ளனர். புதிய தலைமுறை செய்தியில் அவ்வாறான எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.
பிரதமர் மோடி தாராபுரத்தில் மேற்கொண்ட பரப்புரையில் பேசியது குறித்து வெளியான புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டில் ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.
அடுத்ததாக, 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள் என பிரதமர் மோடி பேசியதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டையும் பரப்பி வருகிறார்கள்.
தாராபுர பரப்புரையில் திமுகவை சாடி பிரதமர் மோடி பேசியது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தியில் வெளியான நியூஸ் கார்டில் ஃபோட்டோஷாப் செய்து பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ஹெச்.ராஜா வடமாநில மக்களுக்கு தமிழக பணிகளில் இடஒதுக்கீடு கேட்டாரா ?
தமிழக தேர்தல் தருணத்தில் செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டுகளை ஃபோட்டோஷாப் செய்து தவறான செய்திகளை வைரல் செய்வது அதிகரித்து வருகிறது என நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க : அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தாரா ?
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி பேசியதாக ஃபோட்டோஷாப் செய்த நியூஸ் கார்டுகளை உருவாக்கி அரசியல் பகடி செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.