பிரதமர் மோடியின் கிரிக்கெட் திறமை எனப் பரப்பப்படும் யுவராஜ் சிங் தந்தையின் வீடியோ !

பரவிய செய்தி

இப்படி இந்த மனுசன் சகல விசயத்தையும் அறிந்து வைத்திருப்பதை தான் எதிரிகளால் ஜீரணிக்க முடியாமல் கதறுறானுக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரனை போல் அற்புதமாக பேட்டிங் நளினம் மிக அருமை…

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கிரிக்கெட் வீரரைப் போல் மிக அற்புதமாக பேட்டிங் செய்கிறார் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.  

Archive link 

அந்த வீடியோவின் கீழே விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

Archive link 

உண்மை என்ன ?

மோடி கிரிக்கெட் விளையாடியதாகப் பரவும் வீடியோ கீ ப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். Yspl_cricket (YOGRAJ SINGH PREMIER LEAGUE) என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோ 2023, மார்ச் 12ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் yograj official (Yograj Singh) எனும் வேறொரு இன்ஸ்டாகிராம் பக்கம் டாக் செய்யப்பட்டுள்ளது. அப்பதிவில், ‘நீங்கள் விளையாடினால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். எனக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் எனக் கூறுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Instagram link 

அந்த டிவிட்டர் பக்கத்தில் yograj singh cricket என்ற இணையதளத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் அவர் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதை அறிய முடிந்தது. அவர் யுவராஜ் சிங், மனன் வோஹ்ரா, தனியா பாட்டியா போன்ற பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

மேற்கொண்டு யோகராஜ் சிங் குறித்துத் தேடியதில், அவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-கின் தந்தை என்பதை அறிய முடிந்தது.

பரவக் கூடிய வீடியோவின் கீழே பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி சீருடையில் இருக்கும் புகைப்படம் குறித்துத் தேடினோம். இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியைக் காணப் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியா பிரதமரும் வருகை புரிந்திருந்தனர்.

Archive link

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மோடி வரிசையாக நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் மோடி இந்திய கிரிக்கெட் சீருடையில் இல்லை. அவர் வழக்கமாக அணியும் குர்தா பைஜாமா உடையிலேயே உள்ளார். அப்புகைப்படத்தினை எடிட் செய்து மோடி கிரிக்கெட் சீருடையில் இருப்பதுபோல சித்தரித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடும் வீடியோ என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை அல்ல. அதில் இருப்பது யோகராஜ் சிங் எனும் கிரிக்கெட் பயிற்சியாளர், அவர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
Back to top button