பிரதமர் மோடிக்கு மேல் நேரம் 4:20 எனக் காண்பித்ததாக எடிட் செய்த படத்தைப் பதிவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ !

பரவிய செய்தி

சிறந்த பேசும் படம் !

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இரயில் நிலையம் ஒன்றில் நடந்து வரும் போது அவரின் தலைக்கு மேலே இருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 4:20 எனக் காண்பித்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், : சிறந்த பேசும் படம் ” எனக் கூறி பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

Archive link  

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 டிசம்பர் 14ம் தேதி லைவ்மின்ட் இணையதளத்தில், பிரதமர் மோடி நள்ளிரவில் பனராஸ் இரயில் நிலையத்தை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பில் பிரதமரின் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. அதில் நேரம் 01:13 என்றே இடம்பெற்று இருக்கிறது.

2021 டிசம்பர் 14ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பனராஸ் பகுதியில் உள்ள இரயில் நிலையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்ட புகைப்படங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Twitter link

2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் டிஜிட்டல் கடிகாரத்தில் இருந்த 1:13 மணி என்பதை 4:20 என எடிட் செய்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?

மேலும் படிக்க : மோர்பி பாலத்தை பார்வையிட பிரதமர் மோடி சென்றதற்கு ரூ.30 கோடி செலவு என ஆர்டிஐ தகவல் வெளியானதா ?

இதற்கு முன்பாக, கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளிவிட்டதாகவும், மோர்பி பாலத்தை பார்வையிட பிரதமர் மோடி சென்ற பயணத்திற்கு ரூ.30 கோடி செலவிட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், இரயில் நிலையத்தில் பிரதமர் மோடி நடந்து செல்கையில் அவரது தலைக்கு மேலே இருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் 4:20 எனக் காண்பித்ததாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader