This article is from Jul 05, 2020

பிரதமர் மோடி பார்வையிட்டது போலியான மருத்துவமனையா ?

பரவிய செய்தி

ஆறு வித்தியாசங்கள். செட் எல்லாம் ஓகே. அந்த ப்ரொஜெக்டர் கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்.. பேஷண்ட் பூரா சாப்பிட உட்கார்ந்த மாதிரி இல்ல இருக்கு.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜூலை 3-ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் மத்தியில் உரையாற்றினார். அதன்பிறகு, கல்வான் பள்ளத்தாக்கில் காயமடைந்த இந்திய வீரர்களை பிரதமர் மோடி ராணுவ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்திய அளவில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பிரதமரின் போட்டோசூட்காக கான்ஃபரன்ஸ் ஹாலை மருத்துவமனை போல் மாற்றி இருக்கிறார்கள் என காங்கிரஸ் , பிற எதிர் காட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், கிரிக்கெட் வீரர் தோனி வருகை தந்த ஹாலை தற்போது அப்படி மாற்றியுள்ளார்கள் எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.

உண்மை என்ன ?

பிரதமர் மோடியின் புகைப்படங்கள் வைரலான பிறகு ஜூலை 4-ம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கம் PIB-யில் வெளியாகி உள்ளது. ” 2020 ஜூலை 03-ம் தேதி பிரதமர் மோடி பொது மருத்துவமனைக்கு பார்வையிட வருகை தந்த போது வசதியின் நிலை குறித்து ஆதாரமற்ற குற்றாச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவிட்-19 காரணமாக பொது மருத்துவமனையின் சில வார்டுகளை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே, வழக்கமான ஆடியோ, வீடியோ பயிற்சி ஹால் ஆகப் பயன்படுத்தி வந்த இந்த ஹால் சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த மருத்துவமனை கோவிட்-19 சிகிச்சைக்காக மாற்றப்பட்டு உள்ளது. கல்வான் பகுதியில் இருந்து வந்த பிறகு காயமடைந்த வீரர்கள் கோவிட் பகுதியில் இருந்து தனிமைப்படுத்துவதை உறுதி செய்ய அங்கு வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதேஇடத்தில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்டனர் ” எனக். கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி அறிக்கை இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அந்த ட்வீட் பக்கத்தை ஆராய்ந்த போது ஜூன் 23-ம் தேதி ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நாரவனே லே-வில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உள்ள வீரர்களை சந்தித்து பேசியதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

Twitter link | archive link 

ஜூன் 23-ம் தேதி தளபதி ஜெனரல் எம்.எம் நாரவனே பார்வையிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட ஹால் பகுதியும், தற்போது பிரதமர் பார்வையிட்ட ஹால் பகுதியில் உள்ள அடையாளங்களும் ஒன்றாக இருப்பதை அறிய முடிகிறது.

ஜூன் 23-ம் தேதி வெளியான செய்திகளில் கூட ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நாரவனே காயமடைந்த வீரர்களை லே மருத்துவமனையில் பார்க்க வந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

முடிவு : 

நம்முடைய தேடலில், லே-வில் உள்ள ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த ராணுவ வீரர்களை பிரதமர் மோடி பார்வையிட்ட பகுதி போட்டோசூட்காக உருவாக்கப்பட்ட இடம் என தவறான தகவலை பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு முன்பாக அதே வார்டில் இருந்த ராணுவ வீரர்களை ராணுவ தளபதி பார்வையிட்ட புகைப்படங்கள், வீடியோ மற்றும் ராணுவத்தின் விளக்கம் நமக்கு கிடைத்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader