மக்களே இல்லாத காலி மைதானத்தில் பிரதமர் மோடி கையசைத்து கொண்டிருந்தாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஹெலிகாப்டர் தரையிறங்கி இருக்கும் மைதானத்தில் நிற்கும் பிரதமர் மோடி பாதுகாவலர்களைத் தவிர மக்களே இல்லாத மைதானத்தில் கையசைத்துக் கொண்டே சுற்றி வருவதாக 28 நொடிகள் கொண்ட வீடியோ பின்னணி இசையுடன் ட்ரோல் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவை குறித்து தேடுகையில், ” 2022 பிப்ரவரி 20-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதியில் மாடிகள் மற்றும் கட்டிடங்களில் மக்கள் குவிந்தனர் ” என ஏஎன்ஐ செய்தி முகமை வைரலாகும் 28 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
#WATCH | People throng terraces and buildings near the helipad to welcome PM Narendra Modi in Unnao #UPElection2022 pic.twitter.com/OxuokLhxaO
— ANI (@ANI) February 20, 2022
#ElectionsWithNDTV | प्रधानमंत्री नरेंद्र मोदी चुनाव रैली के लिए पहुंचे उन्नाव #UttarPradeshElections #UPElections #pmmodi pic.twitter.com/4Q4CCR8Tzt
— NDTV India (@ndtvindia) February 20, 2022
NDTV செய்தியும் அதே வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. மேற்காணும் வீடியோவில், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பகுதியைச் சுற்றி மக்கள் கரகோசம் எழுப்புவதை கேட்கவும், தடுப்புகள் மற்றும் மாடிகளில் மக்கள் இருப்பதை பார்க்கவும் முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி மக்களே இல்லாத காலியான மைதானத்தில் கையசைத்து கொண்டிருப்பதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. உண்மையான வீடியோவில் மக்கள் இருப்பதை பார்க்கவும், அவர்களின் கரகோசத்தை கேட்கவும் முடிகிறது.