எகிப்தில் இஸ்லாமியர்கள் அணியக்கூடிய தொப்பியை பிரதமர் மோடி அணிந்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
எகிப்தில் மகா நடிகன்..
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக தகியா எனப்படுகிற இஸ்லாமிய பாரம்பரிய தொப்பி (Islamic Skull Cap) மத நோக்கங்களுக்காகவும், தினசரி தொழுகைகளின் போதும் இஸ்லாமிய மதத்தினரால் அணியப்பட்டு வருகிறது. இது பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.
இந்நிலையில் எகிப்தில் மதக்குருக்களுடன் இஸ்லாமிய பாரம்பரிய தொப்பி அணிந்து பிரதமர் மோடி நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
எகிப்தில் மகா நடிகன்..🤣 pic.twitter.com/ET1mtoMK0I
— தமிழ்🖤❤ (@ASHOK25539881) June 25, 2023
எங்களுக்கு காரியம் ஆகனும்னா எந்த எல்லைக்கும் போவோம் சாதி மதம் பார்க்க மாட்டோம் எவன் சாமானையும் pic.twitter.com/lzlpAdQzFF
— மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks) June 26, 2023
மேலும் இந்தப் புகைப்படம் முகநூலில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், The Dawoodi Bohras எனும் இஸ்லாமிய இணையதளம், கடந்த பிப்ரவரி 11 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் பரவிவரும் புகைப்படத்தில் இருப்பவர்கள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.
“மும்பையில் தாவூதி போஹ்ரா சமூகத்தின் அரபு அகாடமியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் “பாத்திமித் இமாம்களால் கட்டப்பட்ட பழைய நகரமான கெய்ரோவின் நுழைவாயிலான ‘பாப் சுவைலா’ எனும் அமைப்பை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அல்ஜமியா-துஸ்-சைஃபியா என்ற அரபிக் அகாடமியின் புதிய வளாகத்தை மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10, 2023 அன்று திறந்து வைத்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களில் அவர் இஸ்லாமிய தொப்பி அணியவில்லை என்பதையும் காண முடிந்தது.
கடந்த பிப்ரவரி 07 அன்று தி ஹிந்து வெளியிட்டுள்ள கட்டுரையிலும் “பிரதமர் நரேந்திர மோடி, அந்தேரி கிழக்கில் தாவூதி போஹ்ரா சமூகத்தின் அரபு அகாடமி திறப்பு விழாவிற்காக, ஜனவரி 19 ஆம் தேதி தனது கடைசி பயணத்திற்குப் பிறகு பிப்ரவரி 10 ஆம் தேதி மும்பை செல்கிறார். விழாவின் போது, 53வது அல்-தாய் அல்-முத்லாக் மற்றும் உலகளாவிய தாவூதி போஹ்ரா சமூகத்தின் தற்போதைய தலைவரான சையத்னா முஃபதால் சைஃபுதீனுடன் பிரதமர் மோடி மேடையைப் பகிர்ந்து கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Delighted to join the programme to mark the inauguration of the new campus of @jamea_saifiyah in Mumbai. @Dawoodi_Bohras pic.twitter.com/whzwwXGhjM
— Narendra Modi (@narendramodi) February 10, 2023
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த பிப்ரவரி 10 அன்று பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை பகிர்ந்து “மும்பையில் தாவூதி போஹ்ரா சமூகத்தின் (@Dawoodi_Bohr) அரபு அகாடமியின் புதிய வளாகம் (@jamea_saifiyah) திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது.
இதன் மூலம் அவர் மும்பையில் இஸ்லாமிய மதக்குருக்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படத்தை எடிட் செய்து, அவர் தொப்பி அணிந்திருப்பது போன்று பரப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க : முஸ்லீம் ஓட்டுக்காக மோடியும், அமித்ஷாவும் குல்லா அணிந்ததாக ஃபோட்டோஷாப் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், எகிப்தில் இஸ்லாமிய பாரம்பரிய தொப்பி அணிந்து பிரதமர் மோடி நிற்பதாகப் பரவிவரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அவர் மும்பையில் இஸ்லாமிய மதக்குருக்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை எகிப்து என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.