பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மது ஒழிப்புக்கு எதிரான நிலைபாட்டில் பல்வேறு போராட்டங்களும், தேர்தலின் போது வாக்குறுதிகளும், பிரச்சாரங்களும் மேற்கொள்வதுண்டு. இப்படி இருக்கையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராம சுகந்தன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அய்யா ராமதாஸ் மதுவை ஒழித்த லட்சனம்🤣 pic.twitter.com/VgGSccpGI6
— 🌾கவிகண்ணா🌾 (@FriendsOfVck) February 5, 2023
இது என்ன பாட்டில்..மருத்துவரே..
உங்க மகன் பார்த்தால் அவ்வளவு தான்😂😂
ஏன்??
அப்புறம் அவருக்கும் பங்கு கொடுக்கணும் 🤦🤦 pic.twitter.com/CDBIqNzQe2— தென்குமரி தென்றல் (@Stalinkumari) February 5, 2023
வைரல் செய்யப்படும் பதிவுகளில், இயக்குநர் மோகன் ஜி மருத்துவர் ராமதாஸை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், தொலைபேசி வைக்கப்பட்டு இருக்கும் மேசையின் கீழே இருக்கும் பாட்டில் வட்டம் போட்டு கட்டப்பட்டு உள்ளது. அதேபோல், ராமதாஸ் உடன் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அதே மேசையின் கீழே அதே பாட்டிலின் முழுமையான பகுதி வட்டம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் இருக்கும் பச்சை நிற பாட்டில் அருகே வேறு சில பிளாஸ்டிக் பாட்டில்களும் இருப்பதை பார்க்க முடிந்தது. ஆனால், அந்த புகைப்படங்களில் உள்ள பாட்டில்களில் பெயர்கள் ஏதும் தெளிவாக தெரியவில்லை.
மேற்கொண்டு தேடுகையில், அது ” Colavita CERTIFIED ITALIAN Extra Virgin Olive Oil “ என அறிய முடிந்தது. colavitaindia இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் ஆலிவ் ஆயில் பாட்டிலின் வடிவமும், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பாட்டிலின் வடிவமும் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிந்தது.
colavitaindia இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆலிவ் ஆயில் பாட்டிலின் பின்புற பகுதியில் தகவல்கள் பொறிக்கப்பட்ட பகுதியும், வைரல் செய்யப்படும் படத்தில் உள்ள பாட்டிலில் காண்பிக்கப்பட்ட பகுதியும் ஒன்றாக இருப்பதை காணலாம்.
ராமதாஸ் அவர்களின் வீட்டின் மேசையில் வைக்கப்பட்டு இருந்த ஆலிவ் ஆயில் பாட்டிலையே மது பாட்டில் எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : அன்புமணி ராமதாஸ் கிறிஸ்தவ மதம் மாறி ஊழியம் செய்வதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
மேலும் படிக்க : பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை என எடிட் செய்து பரவும் நியூஸ் கார்டு!
முடிவு :
நம் தேடலில், பாமக நிறுவனர் ராமதாஸ் மதுவை ஒழித்த லட்சணம் எனக் கூறி அவரது வீட்டில் மது பாட்டில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது ஆலிவ் ஆயில் பாட்டில் என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவதாக பாமக தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் இருப்பது மது பாட்டில் அல்ல. ஆலிவ் ஆயில் பாட்டில். தோல் வெடிப்பு உள்ள வயதானவர்களுக்கு எண்ணெய்யை உபயோகிக்க பயன்படுத்தக்கூடிய பாட்டில் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.