கூட்டமாக பூஜை செய்தவர்கள் காவலரை தாக்கியகாக பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

வடநாட்டில் கூட்டமாக சேர்ந்து பூஜை நடத்தியதை தட்டி கேட்ட காவலரை தாக்கும் பூசாரி.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்க காலத்தில் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், ஒவ்வொரு மதத்தை வைத்தும் தவறான கருத்துக்கள், வீடியோக்கள் பகிரப்பட்டே வந்தன.
வடநாட்டில் கூட்டமாக பூஜை நடத்தியதை தட்டிக் கேட்க சென்ற காவலரை பூசாரி தாக்குவதாக Shaik Hosan Shaik எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பதிவிடப்பட்ட இவ்வீடியோ மே மாதம் இறுதி வரை வைரலாகிக் கொண்டிருக்கிறது.
 
உண்மை என்ன ? 
வைரலாகும் வீடியோவில், காவலர் உடையில் இருப்பவர் உள்பட இடம்பெறுபவர்கள் அனைவரும் நடிப்பது போலவே தோன்றுகிறது. சிலர் வீடியோவின் கமெண்ட்களில் CWE வீடியோ எனக் குறிப்பிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
CWE (Continental Wrestling Entertainment) எனும் மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தை wwe மல்யுத்த வீரர் தி கிரேட் காளி நிறுவி உள்ளார். CWE உடைய யூடியூப் சேனலில் மல்யுத்தம் சார்ந்த பொழுதுபோக்கு வீடியோக்கள் பல இடம்பெற்று உள்ளன. வைரலாகும் வீடியோவின் உண்மையான வீடியோ ” singham dubey Interrupt shastri while doing puja ” எனும் தலைப்பில் 2019 ஜூன் 18-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவில், கையில் சாம்பியன் பெல்ட் உடன் காவலர் உடையில் நுழையும் நபர் பூஜை செய்யும் நபரை இழுத்து செல்லும் பொழுது அங்கிருப்பவர்கள் தாக்குவது போன்று காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவில் 1.30வது நிமிடத்தில் இருந்து கட் செய்து பூஜை செய்த கூட்டம் காவலரைத் தாக்கியதாக வதந்தியை பரப்பி உள்ளனர்.
முடிவு : 
நமது தேடலில், வடநாட்டில் கூட்டமாய் பூஜை செய்தவர்களை தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய பூசாரி என வைரலாகும் வீடியோ 2019-ல் CWE யூடியூப் சேனலில் வெளியான மல்யுத்தம் சார்ந்த பொழுதுபோக்கு வெப் சீரிஸ் வீடியோ என அறிய முடிகிறது. தவறான வீடியோக்களை பகிர்ந்து மத வெறுப்பை உருவாக்க வேண்டாம்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button