சீட் பெல்ட் அணியாத காவலர் வாகனத்தைப் பிடித்த மக்கள்| சட்டம் அனைவருக்கும் சமம் !

பரவிய செய்தி

இறுதியாக சட்டம் ஆனது சட்டத்திற்கே அபராதம் விதித்து உள்ளது. ராஞ்சியில் சீட் பெல்ட் அணியாத காவலர் வாகனத்திற்கு பொதுமக்கள் அபராதம் விதித்து உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பிறகு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவிலான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் லட்சங்களில் அபராதம் விதிக்கும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.

Advertisement

இதனால் மக்களுக்கு வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதை சமூக வலைதளங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில், ராஞ்சியில் போலீஸ் வாகனத்தை மக்கள் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தி குறித்து ஆராய்ந்த பொழுது, செப்டம்பர் 6-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் இணையதளத்தில் வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ராஞ்சி நகரில் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக போலீஸ் அதிகாரிகள் அமர்ந்து இருக்கும் போலீஸ் வாகனத்தை சாலையில் பொதுமக்கள் கூட்டமாக மறித்து உள்ளனர்.

அதில், காவலர்கள் மீது பொதுமக்கள் கேள்விகளை எழுப்பியதோடு, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை அபராத ரசீது வழங்குமாறு கேட்டு உள்ளனர். போலீஸ் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

இதேபோன்று, செப்டம்பர் 7-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வெளியான செய்தியில், ராஞ்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறியும் உயர் அதிகாரியால் ரூ 36,000 அபராத ரசீது வழங்கப்பட்டுள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button