உத்தரப் பிரதேசத்தில் வானில் விசித்திர காட்சி என பழைய ஸ்டார்லிங்க் வீடியோவைப் பதிவிட்ட பாலிமர் செய்தி

பரவிய செய்தி

இரவு வானில் ஜொலித்த விசித்திர காட்சி.. மிரண்டு போன உத்தரப் பிரதேச மக்கள்..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

செப்டம்பர் 13ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் ஸ்டார்லிங்க்-ன் 51 செயற்கைக் கோள்கள் வரிசையாகச் செல்கின்றன என சமூக வலைதளவாசிகளும், செய்தி ஊடகங்களும் தங்களின் டிவிட்டர் பக்கங்களில் இவ்வீடியோவினை பகிர்ந்துள்ளனர்.

Advertisement

இதே வீடியோவினை பாலிமர் தொலைக்காட்சி கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இரவு வானத்தில் ஜொலிக்கும் விசித்திர காட்சியைக் கண்ட உத்தரப் பிரதேச மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

பாலிமர் தொலைக்காட்சி குறிப்பிடுவது போல இது விசித்திர காட்சி அல்ல. எலன் மஸ்க் உடைய ஸ்டார்லிங்க் எனப்படும் இணையம் சேவை வழங்கக்கூடிய நிறுவனத்தின் செயற்கைக் கோள்களாகும். 

இத்திட்டமானது செயற்கைக் கோள்களைப் பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிறுத்தி, அதன் மூலம் அதிவேகமான இணையச் சேவையை உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கச் செய்வதாகும். சுமார் 40,000-க்கும் மேலான செயற்கைக் கோள்களை இவ்வாறு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். அதில், இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் செய்யப்படும் வீடியோவினை ஸ்க்ரீன்சார்ட் எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்தோம். இது தொடர்பாக 2021 டிசம்பர் 4ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. 

ViralVideoLab என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அவ்வீடியோ 2 நிமிடம் 17 விநாடிகளைக் கொண்டுள்ளது. அதே யூடியூப் பக்கத்தில் 2020, ஏப்ரல் 30ம் தேதியில் பதிவிட்ட ஸ்டார்லிங்க் தொடர்பான வீடியோவும் காணக் கிடைக்கிறது. வைரல் செய்யப்படும் வீடியோ ஸ்டார்லிங்க் உடையது. மேலும், அது தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிகிறது.

செய்தி நிறுவனங்கள் முதற்கொண்டு ஸ்டார்லிங்க்-51 என்ற பழைய வீடியோவினை வைரல் செய்யக் காரணம் ஒன்றும் உள்ளது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஸ்டார்லிங்க் நிறுவனம் 51 செயற்கைக் கோள்களை ஃப்ளோரிடாவில் இருந்து விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த நிகழ்வினை ஒப்பிட்டே ஸ்டார்லிங்க் 51 என்ற வீடியோ பரப்பப்படுகிறது. 

முடிவு 

நம் தேடலில், பாலிமர் தொலைக்காட்சி உத்தரப் பிரதேசத்தில் வானில் ஜொலித்த விசித்திர காட்சி என குறிப்பிட்டது, ஸ்டார்லிங்க் உடைய செயற்கைக் கோளாகும். மேலும், 2022 செப்டம்பரில் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகப் கூறுவது உண்மையல்ல. அவ்வீடியோ 2020 மற்றும் 2021 ஆண்டிலேயே யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button