This article is from Oct 06, 2018

போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ்.. போலியோ மருந்து நிறுவனம் மூடல்.!

பரவிய செய்தி

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ்: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபமாக போடப்பட்ட போலியோ தடுப்பூசியில் வைரஸ் கலந்து இருப்பதாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

Bio-med நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் Type 2 போலியோ வைரஸ் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இதையடுத்து Drug controller general of india அந்நிறுவனத்தின் மீது FIR பதிவு செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்ததோடு, நிறுவன உரிமையாளரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனிமேல் போலியோ தடுப்பு மருந்து பயன்படுத்த வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

விளக்கம்

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோய்க்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து(vaccine) அரசால் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு அளிக்கும் போலியோ தடுப்பு மருந்தில் மோசமான வைரஸ் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் போலியோ நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என world health organisation அறிக்கையில் குறிப்பிடப்பட்ட Type 2 போலியோ வைரஸ் காசியாபாத்தில் இயங்கி வரும்Bio-med பிரைவேட் லிமிட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் சிறுநீர் மற்றும் மலம் உள்ளிட்டவைகளின் மாதிரிகளில் நடத்திய சோதனையில் type 2 வைரஸ் இருப்பதை கண்டறிந்து உள்ளதாக ministry of  health and family welfare வெளியிட்ட press information bureau-வில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த அறிக்கை வெளியான உடன்  Drug controller general of india அந்நிறுவனத்தின் மீது FIR பதிவு செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர், மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மருந்துகளை திரும்ப பெற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

public health and family welfare இயக்குனர் டாக்டர்.சீனிவாச ராவ், சம்பந்தபட்ட நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளின் அனைத்து பிரிவுகளையும் திரும்ப பெறுமாறும், பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைகளில் Bio-med  தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார். போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து கண்காணிக்குமாறும், உடல்நிலையில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Bio-med  நிறுவனத்தால் 1.5 லட்சம் தடுப்பு மருந்து சந்தையில் வெளியாகி அதில் மூன்றில் இரண்டு மடங்கு பயன்படுத்தப்பட்டு விட்டன. உபயோகிக்கப்படாத மூன்றில் ஒரு பங்கு மட்டும் திரும்ப பெறப்பட்டன. Type 2 போலியோ வைரஸ் கண்டறியப்பட்ட 1.5 லட்சம் போலியோ தடுப்பு சொட்டு மருந்தில் சிலவை மட்டும் உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

” Type 1, Type 2, Type 3 என மூன்று விதமான போலியோ வைரஸ் உள்ளன. இதில், type 2 virus case 1999-ம் ஆண்டில் அக்டோபர் 24-ம் தேதி அலிகார், உத்தாரப்பிரதேச உள்ளிட்ட இடங்களில் கண்டறியப்பட்டது என ministry of health and family welfare அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  Bivalent oral polio vaccine(bOPV)  p1, p3 தடுப்பு மருந்து type 1, type 3 வைரஸிற்கு எதிரானவை. trivalent oral polio vaccine(tOPV) ( p1, p2, p3) மூன்று விதமான type-க்கும் எதிரானவை “

செயல்படாத போலியோ வைரஸ் தடுப்பு மருந்து ( inactivated poliovirus vaccine)  மற்றும்  Bivalent oral polio vaccine(bOPV) இல் இருந்து  trivalent oral polio vaccine(tOPV) மருந்துகள் மட்டும் அனைத்து போலியோ தடுப்பு முகாம்களில் வழங்க காரணம் 2016-ல் type 2 போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டது என சர்வதேச சான்றிதழ் வழங்கப்பட்டதால் தான்.

2016 ஆம் ஆண்டில் tOPV தடுப்பு மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு bOPV  இல் இருக்கும் Type 2 வைரஸால் பாதிப்பு ஏதுமில்லாமல் செயலிழந்து விடும் மற்றும் பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை எனவும், இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு எந்த தடுப்பு மருந்து கொடுக்கும் முன் இதை கவனிக்க வேண்டும்:

  • குழந்தைகள் நல மருத்துவரிடம் உங்கள் குழந்தையின் மருத்துவ ஆவணங்களை காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.
  • தடுப்பு மருந்துக்கு முன்னரும், பின்னரும் எம்மாதிரியான அறிகுறிகள் வரும் என அறிந்து கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று அல்லது உடல்நிலை கோளாறு இருந்தால் தடுப்பு மருந்து அளிக்க வேண்டாம்.
  • தடுப்பு மருந்து பற்றிய விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

” குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே இந்த நிறுவனத்தின் bOPV மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வைரஸ் உள்ள போலியோ தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு அளிக்கவில்லை. ஆகையால், அச்சமோ அல்லது தேவையற்ற வதந்தியையோ நம்ப வேண்டாம் ” 

எதிர்காலத்தில் போலியோ சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தகவல்களை நம்ப வேண்டாம். தமிழகத்திற்கு குறிப்பிட்ட நிறுவனத்திடம் பெறப்பட்ட 3.2 லட்சம் போலியோ தடுப்பு மருந்துகள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வதந்திகளை நம்பி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருக்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader