பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் ஸ்டாலினுடன் இருப்பதாக பரவும் எடிட் ஃபோட்டோ!

பரவிய செய்தி
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு குற்றவாளியுடன் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் நெருக்கமாக இருக்கும் இந்த படத்திற்க்கு என்ன பதில் வைத்திருக்கிறார் பாலியல் வழக்கில் ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கு என்று எடுத்து கொள்ளலாம்.
மதிப்பீடு
விளக்கம்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருப்பதாக கூறி அறந்தாங்கி பாஜக எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷார்டை பலரும் முகநூலில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையில், அருளானந்தம், பைக் பாபு, ஹேரேன்பால் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மூன்று பேர்களில் அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுகவின் நகர மாணவரணி செயலாளராக இருப்பது தெரிய வந்தது. அருளானந்தம் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. கைதுக்கு பின்னர் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக கட்சியும் அறிவித்தது.
இப்படி இருக்கையில், அருளானந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வைரல் செய்து வருகிறார்கள். அரைகுறையாக செய்யப்பட்ட எடிட் புகைப்படத்தை கண்ட சிலரும் ஃபோட்டோஷாப் சரியாக இல்லை என கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும், இப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
2019 நவம்பர் 2-ம் தேதி பாஜக தலைவர் ஹெச்.ராஜா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அருளானந்தம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பூக்கொத்து வழங்கும் புகைப்படத்தை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : “வர்ண நீதி தழைக்க நான் முதல்வராக தயார்” என ஹெச்.ராஜா கூறினாரா ?
தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறாத கருத்துக்களை எடிட் செய்து வதந்தி பரப்புவது, வீடியோக்களை, புகைப்படங்களை தவறாக எடிட் செய்து பரப்புவதை தொடர்ந்து நாம் பதிவிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க : திமுக வெற்றி பெற்றால் தைப்பூச விடுமுறை ரத்து செய்வதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.