கிரிக்கெட் வீரர் போலார்டு தமிழ் கலாச்சாரத்தின் மீது விருப்பம் கொண்டவரா ?

பரவிய செய்தி
தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக விருப்பம் கொண்ட மேற்கு இந்திய பிரபல கிரிக்கெட் வீரர் போலாட் !! வாழ்த்துக்கள் !! பாராட்ட நினைத்தால் பகிருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கிரண் போலார்டு தமிழர் கலாச்சாரத்தின் மீது அதிகம் விருப்பம் கொண்டவர் என அவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
டிசம்பர் 8-ம் தேதி Yoganathan Piragalathanan என்பவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த மீம் பதிவு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வருகிறது. மேலும், அவரின் பதிவை முகநூல் குழுக்களில் பகிர்ந்த பதிவும் ஆயிரங்களில் லைக்குகள் மற்றும் ஷேர்களை பெற்று வருகிறது.
கிரண் போலார்டு மேற்கிந்திய நாட்டின் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரபல ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர். அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்பில்லை. மேலும், கிரண் போலார்டின் குடும்பம் அணிந்து இருப்பது தமிழர் உடையே அல்ல என்பதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அது தமிழர் உடை அல்ல , இந்தியர் உடை என பொதுவாக கூறலாம்.
ஏன், இதனை விரிவாக பதிவிடுகிறோம் என்றால், இப்படி பரவும் மீம் பதிவின் கமெண்ட்களில் பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். புகைப்படத்தில் இருப்பதற்கும், தமிழர் கலாச்சாரம் எனக் கூறுவதற்கும் தொடர்பில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.
Part one of bro in law .. wedding .. !! 😙😙😙 njoying this pic pic.twitter.com/go3MTMMWUF
— Kieron Pollard (@KieronPollard55) January 24, 2017
கிரிக்கெட் வீரர் கிரண் போலார்டு தன்னுடைய குடும்பத்தினருடன் இந்திய உடையில் இருக்கும் புகைப்படத்தை 2017 ஜனவரி 24-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கிரண் போலார்டு குறித்த இதே மீம் பதிவுகள் 2017-ம் ஆண்டிலேயே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. அதற்கு 2017-ல் யூடர்ன் மீம்ஸ் வடிவில் தவறான செய்தி என பதிவிட்டு இருந்தோம். ஆனால், அதனையே மீண்டும் பரப்பி வருகின்றனர். தவறான தகவலை பகிர வேண்டாம், உண்மை என நினைத்து கமெண்ட் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.