This article is from Jul 21, 2020

ஏழை மாணவர்களுக்கு உதவிக் கிடைப்பதாக பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும். அவர்கள் பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் செய்யப்படும் தங்கும் விடுதி செலவு உள்பட . Contact : Dr. R.Venkatesh M.B.B.S. Mob : 9092355789 . Plz Forward It To Atleast One Group .

மதிப்பீடு

விளக்கம்

பள்ளிப் படிப்பை முடித்தும் கல்லூரியில் சேர வசதியில்லாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக மருத்துவர் வெங்கடேசன் என்பவரின் பெயரில் ஃபார்வர்டு தகவல் ஒன்று வாட்ஸஅப் குழுக்கள், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

Facebook link | archive link 

எங்களிடம் தேடலில், இதே ஃபார்வர்டு தகவல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது என்பதை அறிய நேர்ந்தது. அதில், இடம்பெற்று இருக்கும் மருத்துவர் வெங்கடேசன் தொடர்பு எண்ணிற்கு அழைத்த போது தொலைபேசி எண் பயன்பாட்டில் இல்லை, அந்த தொலைபேசி எண் மருத்துவருடையதும் அல்ல. பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்ணை கொண்ட தகவலை உண்மை என நினைத்து சமூக வலைத்தங்களில் பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : ஏழை மாணவர்களின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை எண்கள் !

ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக பல போலி ஃபார்வர்டு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. தவறான தகவல்களை நம்பி பரப்ப வேண்டாம், சரியான தகவல்களை மட்டும் பகிரவும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க : கல்வி உதவித்தொகை என பரவிய உயர் நீதிமன்ற உத்தரவு எண் எதைக் குறிக்கிறது ?

Please complete the required fields.




Back to top button
loader