போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

பரவிய செய்தி

யாருக்கெல்லாம் போப் ஆகணும் போலிருக்கு..? எல்லாரும் அவங்கவங்களுக்கு மசாஜ் செய்யத்தான் செய்கிறானுங்க போல…. அதனால்தான் அங்கே எந்த குற்றவாளிக்கும் தண்டனையில்லை. தண்டனையை என்று வந்தால் போப்பிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சில நாட்களுக்கு முன்பாக ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்திருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வந்தநிலையில் தற்போது அவர் ஒரு குளியல் தொட்டியில் (Hot Tub) இரண்டு இளம் பெண்களுடன் இருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

மேற்காணும் படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial intelligence) மூலம் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முழுவதும் சமீபத்தில் தவறாக பரப்பப்படுவதோடு சில புனைக்கதைகளையும் பரப்பி வருகின்றன.

பரப்பப்பட்ட இந்தப் புகைப்படத்தில் சில முரண்பாடுகளை நாம் காண முடிந்தது. புகைப்படத்தின் இடது பக்கத்தில் உள்ள பெண்ணின் கை விரல்கள் மனிதனின் கைகளைப் போன்று இல்லாமல் இரண்டு விரல்களோடு முழுமையடையாமல் உள்ளன.  பல புகைப்படங்களில் கைகளையும் குறிப்பாக விரல்களையும் துல்லியமாக மீண்டும் உருவாக்க AI கருவிகள் போராடுவதாக பல ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்மூலம் இது AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதியாகக் காட்டுகிறது.

இந்த வரிசையில் சில நாட்களுக்கு முன், வித்தியாசமான உடை அலங்காரத்தில் மோடி எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த உடை மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

யூடர்ன் தரப்பிலிருந்து அதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டதோடு மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் அவர் அணிந்த சில உடை அலங்காரங்களின் தொகுப்பையும் யூடர்ன் தன்னுடைய தளத்தில் கட்டுரையாக வெளியிட்டது. மேலும் அதில் இந்தியத் தலைவர்களான ஜவர்ஹலால் நேருடாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்மகாத்மா காந்தி எனப் பல தலைவர்களின் AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதுபோன்ற படங்களை சில உள்ளீடுகள் கொடுப்பதன் மூலம் மிக எளிதாக Midjourney, DALL-E, Dreamstudio, Bing Image Creator மற்றும் DeepAI போன்ற AI இணையதளங்களைப் பயன்படுத்தி படங்களை உருவாக்க முடியும். இதற்கு சான்றாக போப் பிரான்சிஸைக் கொண்டு AI மூலம் உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

முடிவு:

நம் தேடலில், போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்ட படம் என்றும், இதன் உண்மைத்தன்மையை அறியாமல் பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader