This article is from Mar 30, 2018

ஃபேக் நியூஸ் மூலம் மதக் கலவரம் செய்யத் தூண்டியவர் கைது.

பரவிய செய்தி

கர்நாடகாவில் வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிட்ட ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் இணையதளத்தின் நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

சமண மதத் துறவியை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாகக் கூறி, கர்நாடகாவில் ஆளும் சித்தராமையா ஆட்சியின் மீது போலியான குற்றம்சாட்டை இணையத்தில் பதிவிட்ட ஃபோஸ்ட்கார்ட் நியூஸின் நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெக்டே கைதாகியுள்ளார்.

விளக்கம்

ர்நாடகா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற தேசிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தீவிர பிரச்சாரத்தை பாஜக கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான், கர்நாடகாவில் வகுப்புவாத கலவரத்தை தூண்டும் விதத்தில் போலியான செய்தியை வெளியிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இணையதளத்தில் செய்திகளை வெளியிடும் ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் (Postcard News) தளத்தின், இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில், “ கர்நாடகாவில் சமணத் துறவியை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியுள்ளார்கள். சித்தராமையாவின் ஆட்சியில் யாரும் பாதுகாப்பில்லை ” என்று மார்ச் 18-ம் தேதி பதிவிடப்பட்டது.

இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் வலைத்தளங்களில் பகிரத் தொடங்கிய உடன் இவை தவறான செய்திகள் என கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு, ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் தளத்தின் நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெக்டேவை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மதவாத உணர்வுகளை தூண்டும் விதத்தில் செய்தியை வெளியிடுவதாக ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பல திரிப்பு செய்திகள் அதிகம் எனவும் பெயர் பெற்ற இணையதளம் . தற்போது, இந்த இணையதளத்தின் நிறுவனர் மீது இரு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஒன்று – பெங்களூர் மாவட்ட காங்கிரஸ் குழுவின் பொது செயலாளர் ஃகப்பார் பைக் அளித்த புகார்.

மற்றொன்று – ராணி சென்னம்மா மற்றும் ஒனக்கே ஒபவா பற்றிய தவறான கட்டுரையை டிசம்பர் 2017-ல் ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் வெளிட்டதாக சஞ்சய் நகர் போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததையும் போலீசார் தற்போது கவனத்தில் கொண்டுள்ளனர்.

சமணத் துறவி ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கி காயப்படுத்தியதாக் கூறி ஃபோஸ்ட்கார்ட் நியூஸ் பதிவிட்ட புகைப்படம் “ ahmisa Kranti “ இணையதளத்தில் வெளியானவை. மார்ச் 11-ம் தேதி காஞ்சலன் கிராமத்திற்கு அருகில் நடத்து சென்றுக் கொண்டிருந்த துறவியின் மீது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதியதால், அவரின் வலதுகை மற்றும் நெற்றியில் சிறு காயங்கள் எற்பட்டுள்ளன.

இதை திரித்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக மாற்றி கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி விக்ரம் ஹெக்டே மீது IPC பிரிவு 153a, 34, 120b, 66 தகவல் தொழில்நுட்பத்தின்படி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி போலியான செய்திகள் மூலம் மதவாதக் கலவரத்தை தூண்டவே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர். எனினும், விக்ரம் ஹெக்டேவின் கைதுக்கு பல பாஜக முகநூல் பக்கங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், பாஜக ஆதரவு முகநூல் பக்கங்களில் #ReleaseMaheshHegde என்ற ஹஷ்டக்கை ட்ரென்டிங் செய்ய பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ கோழைத்தனமான கர்நாடகா காங்கிரஸ் கட்சி விக்ரம் ஹெக்டேவை கைது செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தம்மை ட்விட்டரில் பின்தொடர்வதாக ஃபோஸ்ட்கார்ட் நியூஸின் நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவின் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, மதக்கலவரத்தை உண்டாக்க புரளிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற மதக்கலவரத்தை உருவாக்க எண்ணுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மேலும், அவர்களுக்கு துணை நிற்பவர்கள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader