முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்து விட்டதாக வதந்தி!

பரவிய செய்தி

சற்றுமுன் ஆழ்ந்த இரங்கல்.. முன்னாள் இந்திய குடியாரசுதலைவர் பிரணாப்முகர்ஜி அவர்கள் காலமானார்.. வீர வணக்கம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Advertisement

அவருக்கு மூளையில் இருக்கும் இரத்த கட்டிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கொரோனாவிற்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பிரணாப் முகர்ஜி உடல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், ” என் தந்தை உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் ” என பிரணாப் முகர்ஜியின் மகனும் , காங்கிரஸ் தலைவருமான அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

Twitter link | archive link 

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாகவும், சுயநினைவின்றி உள்ள அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button