பிரசாந்த் கிஷோர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் பொய் செய்தி!

பரவிய செய்தி

இதுக்கு எதுக்குடா…? வெள்ளையும் சொள்ளையுமா திரிஞ்சிட்டு கிடந்த…? காங்கிரஸ்ல BJP Sleeper cell ஆக சேர்ந்து, கவுக்க நினைச்சியா…??? IPAC -பிரசாந்த் கிசோர், பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம்!

X Link

மதிப்பீடு

விளக்கம்

பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ’ஜன் ஸ்வராஜ்’ அமைப்பின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

FaceBook Link

சமீபத்தில் ‘தி ஒயர்’ ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல் ஒன்றை அளித்தார். அதில், நீங்கள் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையுமென 2022, மே மாதம் கருத்து தெரிவித்தீர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை என கரண் தாப்பர் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய பாஜக-வின் கடிதம் குறித்து அக்கட்சியின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் தேடியதில், அப்படி எந்த கடிதமும் பதிவிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. 

மேற்கொண்டு பிரசாந்த் கிஷோரின் எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து தேடினோம். அப்படி எந்த பதிவும் இல்லை. பரவக் கூடிய கடிதம் பற்றி ’ஜன் ஸ்வராஜ்’ எக்ஸ் பக்கத்தில் கடந்த 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

அதில், நீங்கள் போலி செய்திகளைப் பற்றி பேசுகிறீர்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் போலி செய்தி பரப்புகிறார் என ஸ்கிரீன் ஷாட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அப்படத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் பரவக் கூடிய கடிதத்தை வாட்சப்பில் பகிர்ந்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவரது வாட்சப்பில் இருந்து பகிரப்பட்டதா என்பதை கண்டறிய முடியவில்லை. ஆனால், இது போலியான கடிதம் என்பதை ஜன் ஸ்வராஜ் பதிவில் இருந்து உறுதி செய்ய முடிகிறது. 

இது குறித்து மேற்கொண்டு தேடியதில், செப்டம்பர் 25, 2023 அன்று ANI எக்ஸ் பக்கத்தில் ஒரு கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அது, பாஜகவின் நாகாலந்து மாநில தலைவராக பெஞ்சமின் யெப்தோமி (Benjamin Yepthomi) நியமிக்கப்பட்டது தொடர்பானது. அந்த கடிதத்தில் பிரசாந்த் கிஷோர் பெயர் இருப்பது போன்று எடிட் செய்து தவறாக பரப்பப்படுகிறது. 

முடிவு: 

பிரசாந்த் கிஷோர் பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மை அல்ல. பரவக் கூடிய கடிதம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது

Please complete the required fields.
Back to top button
loader