எளிமையாக வாழ்ந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எனப் பரவும் வதந்தி படம் !

பரவிய செய்தி

மிகவும் எளிமையா வாழ்ந்த இவரைத்தான்.. மோடி ஜனாதிபதியாக்கி இருக்கிறார்…!!! ஸ்ரீ திரெளபதி_முர்மூ

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அவர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை என சிறிய சமையல் அறையில் பெண் ஒருவர் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படம் ஆனது 64 வயதான திரெளபதி முர்முவின் இளமைக்காலத்தில் எடுக்கப்பட்டது போல் இல்லை, சமீபத்தில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. மேலும், புகைப்படத்தில் இருக்கும் பெண்ணும் திரெளபதி முர்மு இல்லை.

இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூலை 21-ம் தேதி ஷீலா பாட் என்பவர் ட்விட்டரில் திரெளபதி முர்மு அவர்களின் இளமைகால படங்கள் மற்றும் அவரின் பூர்வீக கிராமமான உபெர்பெதா மற்றும் அங்குள்ள மண் வீட்டை குடும்பத்தார்கள் மறுகட்டமைப்பு செய்ததாகவும், அவரது வீட்டில் உள்ள சமையலறை என புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், வைரல் செய்யப்படும் புகைப்படமும் உள்ளது.

twitter link | archive link

மேற்கொண்டு தேடிய போது, சக்தி டிவி எனும் யூடியூப் சேனல் ஒன்றில் திரெளபதி முர்மு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தின் ஹோம் டூர் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திரெளபதி முர்முவின் இல்லம் எனக் கூறி காண்பிக்கப்பட்ட வீட்டில் பேட்டி அளித்த மற்றும் வீட்டைச் சுற்றிக்காட்டிய பெண்ணே வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் எனத் தெளிவாகிறது.

இதற்கு முன்பாக, திரெளபதி முர்முவின் வீட்டைக் காண வந்த வேறொருவர் அப்பெண்ணை சமையல் அறையில் அமர்ந்து இருக்கும் வகையில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், அதை திரெளபதி முர்மு எனத் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், மிகவும் எளிமையாக வாழ்ந்த இவரைத்தான் மோடி ஜனாதிபதியாக்கி இருக்கிறார் என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் திரெளபதி முர்மு அல்ல. அவரது பூர்வீக கிராமத்தில் உள்ள வீட்டில் சமீபத்தில் அங்குள்ளவர்களை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader