குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் வரமுடியாது. இதுல பழங்குடிஇனத்த உச்சில உக்காரவைக்கப் போறாங்களாம். முர்மு மேடம் கவனம்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா சிவப்பு கம்பளத்தில் நடப்பதும், ராம்நாத் கோவிந்த் தள்ளி வெளியே நடந்தும் வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

ராம்நாத் கோவிந்த் பற்றி பரப்பப்படும் என்டிடிவி செய்தியின் புகைப்படம் குறித்து தேடுகையில், ” 2021-ம் ஆண்டு அகமதாபாத் பகுதியில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் ஆனது ” நரேந்திர மோடி மைதானம் ” எனும் பெயரில் திறந்து வைக்கும் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு உள்ளனர். வைரல் செய்யப்படும் புகைப்படம் கீழ்காணும் செய்தியில் இருந்தே எடுக்கப்பட்டு இருக்கிறது”

எனினும், ராம்நாத் கோவிந்த் மற்றும் அமித்ஷா வருகையின் போது எடுக்கப்பட்ட சிறு காட்சி மட்டுமே இடம்பெற்று இருந்தது. ஆகையால், முழுமையான காட்சி குறித்து தேடிய போது, குடியரசுத் தலைவரின் யூடியூப் சேனல் மற்றும் தூதர்சன் சேனலில் முழு நேரலை வீடியோவில் குடியரசுத் தலைவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதை பார்க்க முடிந்தது

விழாவிற்கு வந்த குடியரசுத் தலைவர் பூமி பூஜை நிகழ்வை முடித்துக் கொண்டு மேடைக்கு செல்கிறார். அப்போது அங்கு விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தில் நடக்காமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா உள்பட அனைவரும் பாதையை கடந்து செல்வதை 4.46 வது நிமிடத்தில் பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க : குடியரசுத்தலைவர் கோவிலுக்குள் செல்ல அர்ச்சகர்கள் அனுமதிக்க மறுத்தனரா ?

மேலும் படிக்க : குடியரசுத்தலைவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பா ?

இதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என பலமுறை வதந்திகள் பரவி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்று மறுக்கப்பட்டு, தரையில் நடக்க வைத்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader