பிரியா மாலிக் தங்கம் வென்றது உலக கேடட் மல்யுத்த போட்டி, ஒலிம்பிக் இல்லை !

பரவிய செய்தி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் பிரியா மாலிக் !
மதிப்பீடு
விளக்கம்
டோக்கியோவில் நடைபெற்று vவரும் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியின் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பிரியா மாலிக் வென்று கொடுத்ததாக ட்விட்டர், சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
இன்னும் சில பதிவுகளில், ஒலிம்பிக்கின் உலக கேடட் சாம்பியன்ஷிப் பிரிவில் இந்திய வீரர் பிரியா மாலிக் தங்கம் வென்றதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
Power of Indian women#டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியின் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை #பிரியாமாலிக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்#Tokyo2020 pic.twitter.com/RBdcugWHaq
— Fenn Russel (@fennrussel) July 25, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உலக கேடட் சாம்பியன்ஷிப் பிரிவில் இந்திய வீரர் பிரியா மாலிக் தங்கம் வென்றார்.
💪💪💪🔥🔥🔥 pic.twitter.com/LbszCUWmxU
— 🐋 Syed 🐋 (@Syedabudtahir) July 25, 2021
உண்மை என்ன ?
இந்தியா வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டியில் அல்ல, ஹங்கேரியின் புதாபெஸ்ட் பகுதியில் நடைபெற்று வரும் உலக ” கேடட் ” மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் வென்றுள்ளார்.
உலக கேடட் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 73கி எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், பெலாரசின் கேசெனியா படாபோவிச் மோதினர். இதில் 5-0 என்ற கணக்கில் பிரியா மாலிக் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆனால், பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவா ?
இதற்கு முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பழைய வீடியோ ஒன்றை தவறாக பரப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.