This article is from Mar 08, 2022

மோடியை பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கோசமிட்டதாக வதந்தி !

பரவிய செய்தி

மோடிஜியை பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்
எம்.பி.க்கள் பரிந்துரைத்ததால், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி’ என்ற கோசங்கள் பலமாக எழுப்பப்பட்டது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பரிந்துரையின் போது எம்பிக்கள் “மோடி மோடி ” என கோசமிட்டதாக 2 நிமிட வீடியோ ஒன்று இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link

மார்ச் 4-ம் தேதி பஞ்சாப் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?  

2020 அக்டோபர் மாதம் தமிழ்நாடு பாஜக இளைஞரணியின் முகநூல் பக்கத்தில், ” பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி…மோடி…மோடி… ” என கோசமிட்டதாக இதே வீடியோவை பதிவிட்டு இருக்கிறனர். ஆனால், இதுவும் உண்மை அல்ல.

மேலும் படிக்க : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் “மோடி மோடி” எனும் முழக்கம் எழுப்பப்பட்டதா ?

2020-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என கோசமிட்டதாக பரவி வரும் வீடியோ, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக வாக்கு எடுக்க வேண்டும் என ” Voting Voting ” என கோசமிட்டு உள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என முழங்கியதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல் என நாம் விரிவான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறோம்.

2020 அக்டோபர் 26-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒளிபரப்பு செய்த Public news சேனல் வீடியோவில் 13.30வது நிமிடத்தில் இருந்து வைரல் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அதில், 13.30-வது நிமிடத்தில் ” Voting Voting ” என முழங்குவதை கேட்கலாம்.

முடிவு :

நம் தேடலில், உக்ரைன் போர் சூழலில் மோடியை பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பரிந்துரைத்ததால், ” மோடி மோடி’ என்ற கோசங்கள் எழுப்பப்பட்டதாக பரவும் தகவல் மற்றும் வீடியோ பொய்யானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader