பேராசிரியர் வர்மா 1 கோடி ராயல்டி தொகையை நிவாரண நிதிக்கு அளித்தாரா ?

பரவிய செய்தி

பேராசிரியர் ஹெச்.சி வர்மா, ” concept of physics ” என்ற புத்தகத்திற்கு ராயல்டி தொகையாக ஆண்டுக்கு கிடைத்த 1 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரணம் நிதி மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு அளித்து இருக்கிறார். இவர் தற்பொழுதும் தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் தான் பயணிக்கிறார். ஏழை மாணவர்களுக்கு நிதி உதவியையும் அளித்து வருகிறார்.

மதிப்பீடு

விளக்கம்

சமூக வலைதளங்களில் உலாவும் வதந்திகளை பல விதங்களாக வகைப்படுத்தவும் முடியும். எதிர்மறையான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கும் வதந்திகளுக்கு இடையே நல்ல எண்ணத்தை, பாராட்டுகளை தெரிவிக்க தூண்டும் வகையில் தவறான தகவல்களும் பதிவிடுவதும் உண்டு. எப்படி இருந்தாலும், தவறான தகவல்கள் மக்களிடத்தில் செல்வது தவறான செயலே என்ற நிலைப்பாடு வேண்டும்.

Advertisement

சமீபத்தில் Work for unity என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி பேராசிரியர் வர்மா தனக்கு கிடைத்த ரூ.1 கோடி ராயல்டி தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு முழுவதுமாக அளித்து இருப்பதாக மீம் வடிவில் பதிவாகி இருக்கிறது. அந்த பதிவு 1.2 ஆயிரம் லைக்குகள் மற்றும் 19 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

பிரபல இயற்பியல் பேராசிரியர் ஹெச்.சி.வர்மா குறித்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள முற்பட்ட பொழுது முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை காண நேரிட்டது.

2018-ல் ட்விட்டர் பதிவொன்றில், ” பேராசிரியர் வர்மா, ” concept of physics ” என்ற புத்தகத்திற்கு ராயல்டி தொகையாக 1 கோடியை பெற்றார். அதனை முழுவதுமாக பிரதமரின் நிவாரண நிதிக்கும், தொண்டு நிறுவனத்திற்கும் அளித்து உள்ளார். கான்பூர் ஐஐடி-யில் மூத்த பேராசியராக பெறும் ஊதியத்தில் ஏழை மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துகிறார். இன்றும் தன்னுடைய பஜாஜ் வாகனத்திலேயே பயணிக்கிறார். ரியல்ஹீரோ ” எனக் கூறி 2018 ஆகஸ்ட் 21-ம் தேதி பதிவிடப்பட்டது.

Advertisement

இந்த ட்விட்டர் பதிவு வைரலாகிய பிறகு பேராசிரியர் வர்மாவின் கவனத்திற்கு சென்றதால் அதற்கு முகநூல் பக்கத்தில் 2018-ல் ஆகஸ்ட் 13-ம் தேதி பதில் ஒன்றை அளித்த இருந்தார். அதில், ” அன்பான நண்பர்களே, நான் ராயல்டி தொகையாக சம்பாரித்த 1 கோடியை முழுவதுமாக பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக கூறும் அந்த ட்விட்டர் பதிவு பற்றி அறிந்தேன். நான் அதை செய்ய விரும்புகிறேன். அதேநேரத்தில், அந்த தகவலை திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறேன். பதிவில் ஒரு ஸ்கூட்டர் புகைப்படமும் காட்டப்பட்டு உள்ளது . என்னிடம் அந்த வண்ணம் மற்றும் தயாரிப்பில் ஸ்கூட்டர் இருந்ததில்லை. நான் உங்களில் ஒருவன், ஒரு சாதாரண மனிதன் மற்றும் இயற்பியல் கற்பவர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

கான்பூர் ஐஐடி-யின் இயற்பியல் பேராசிரியரான ஹரிஷ் சந்திர வர்மா தனக்கு 1 கோடி தொகை கிடைத்தது பற்றி பரவிய வதந்தி குறித்து வெளியிட்ட பதிவிற்கு 12 ஆயிரம் லைக்குகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் கிடைத்தன. இதையடுத்து அந்த வதந்தி ட்விட்டர் பதிவும் நீக்கப்பட்டது. தன்னை ஹீரோவாக பார்க்க வேண்டாம், சாதாரண மனிதன் என கூறியதற்கு பலரும் பேராசிரியர் வர்மாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

ஓராண்டிற்கு முன்பு வெளியாகிய வதந்தியை பேராசியர் வர்மாவே மறுத்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டார். ஆனால், தற்பொழுது மீண்டும் அதே வதந்தி மீம் வடிவில் முகநூலில் வைரலாகி வருகிறது. தவறான தகவல் மக்களிடம் செல்லக்கூடாது என தன்னைப் பற்றிய நேர்மறையான வதந்தியை மக்களுக்கு எடுத்துக் கூறிய பேராசிரியர் வர்மா அவர்களுக்கு பாராட்டுகள்.

வதந்திகளுக்கு எதிராக மக்களே குரல் எழுப்பும் பொழுது அவற்றின் தாக்கம் தணியக்கூடும் !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button