குஜராத் அரசு வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க முடிவு எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு – மாலை மலர்
மதுவிலக்கு சட்டத்தை அகற்ற குஜராத் அரசு அதிரடி முடிவு. வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு – தந்தி டிவி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சொல்லும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஜராத்திற்கு சென்று முதலில் இதை சொல்ல வேண்டும் என்று கூறி மாலை மலர் மற்றும் தந்திடிவியின் நியூஸ் கார்டுகளை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வாறு பரவும் நியூஸ் கார்டுகளில் “வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு” என்று இடம்பெற்றுள்ளது.
அடேய் அண்ணாமலை ஏமிரா
இதி?? pic.twitter.com/qfcPW6UZU6— டெல்டா ராணி🖤❤ (@aruran_tiru) July 24, 2023
அண்ணாமலை,மதுவிலக்கை தமிழ் நாட்டில் அமுல் படுத்தி, வருவாய் இழப்பில்லாமல் சரிக் கட்டுவதற்கு ஒரு ஒப்பற்ற திட்டம் வச்சிருக்கேன்!அதை சமர்பிக்க முதல்வரிடம் அப்பாய்ன்ட்மென்ட் கேட்டியே, இந்தா அந்த திட்டத்தை எடுத்துக் கொண்டு உடனே குஜராத் செல்லவும்! அங்கே குஜராத் சி எம் உனக்காக வெயிட்டிங்! pic.twitter.com/2TfTDbKvzT
— Jasmine Fernando (@Jasmine01737661) July 24, 2023
உண்மை என்ன ?
இதுகுறித்து மாலை மலரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு போன்று அவர்கள் எதையும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேற்கொண்டு தேடுகையில், கடந்த ஜூலை 19 அன்று “தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.” என்ற தலைப்பில் மாலை மலர் தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டும், சமூக வலைதளங்களில் பரவி வரும் நியூஸ் கார்டும் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து “வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு” என்று மாற்றியுள்ளனர்.
இதேபோன்று, தந்தி டிவியின் நியூஸ் கார்டு குறித்தும் அவர்களது பக்கத்தில் தேடியதில், அவ்வாறு எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
கடந்த ஜூலை 19 அன்று “தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்; குவாட்டருக்கு ரூ10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ320 வரை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு; மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு” என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
#BREAKING || தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்
குவாட்டருக்கு ₨10 முதல் முழு பாட்டிலுக்கு ₨320 வரை உயர்த்தி டாஸ்மாக்… pic.twitter.com/vmKxJKdjOJ
— Thanthi TV (@ThanthiTV) July 19, 2023
எனவே பரவி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டும் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
மேலும் படிக்க: பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதானியிடம் ஒப்படைக்கப் போவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு செய்ததாகப் பரவி வரும் தந்தி டிவி மற்றும் மாலை மலரின் நியூஸ் கார்டுகள் இரண்டும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.