This article is from Dec 20, 2018

PUBG விளையாட்டுக்கு தடையா ?

பரவிய செய்தி

2019 ஜனவரி 1-ம் தேதி முதல் Pubg விளையாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

சர்வதேச அளவில் வயது வரம்பு மற்றும் குடியுரிமை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை 2019 தொடக்கத்தில் இருந்து பலப்படுத்த உள்ளதாக PUBG Esports தெரிவித்து உள்ளது. தடை அல்ல !

விளக்கம்

ஆன்ட்ராய்டு செல்போன் விளையாட்டான PUBG சர்வதேச அளவில் மிகப் பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு வரையிலும் PUBG விளையாட்டை பெரும்பாலானோர் விளையாடி வருகின்றனர். யார் என தெரியாத எதிரிகளுடன் குழுவாக இணைந்து போராடுவதே விளையாட்டின் களமாகும்.

Winner Winner Chicken Dinner “ என்பது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூறப்படும் உற்சாக வாசகம். வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்த விளையாட்டு எனக் கூறுவதை விட அனைவரும் PUBG-க்கு அடிமையாகி விட்டனர் எனலாம்.

சமீபத்தில் PUBG விளையாட்டிற்கு வருகிற 2019 முதல் தடை விதிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தியின் தொடக்கம் எங்கு என தெரியவில்லை. இது தொடர்பாக YOUTURN-க்கு கேள்விகள் வந்தவாறே உள்ளன.

PUBG விளையாட்டை தடை செய்வதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் வெளியாகவில்லை “.

எனினும், PUBG Esports தரப்பில் செப்டம்பர் 14-ம் தேதி ட்விட்டரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

“ உலகெங்கிலும் பல்வேறு பிராந்தியத்தில் உள்ள ஃப்ரோ டீம் மற்றும் ஃப்ரோ பிளேயர்ஸ் மத்தியில் நியாயமான போட்டியை உறுதி செய்ய, 2019 தொடக்கத்தில் இருந்து சர்வதேச அளவில் இஸ்போர்ட்ஸ் உடைய முக்கியமான கொள்கைகள் மற்றும் விதிகளை பலப்படுத்த உள்ளோம் “ என தெரிவித்துள்ளனர்.

2019 முதல் சர்வதேச விதிகள் அனைத்து ஃப்ரோ லெவல் PUBG Esports போட்டிகளுக்கும் பொருந்தும்.

  1. 18 வயதுக்குட்பட்ட எந்த வீரருக்கும் விளையாட தகுதி இல்லை.
  2. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 3 சட்டப்பூர்வ குடிமக்கள்(சிட்டிசன்) அல்லது அந்த பிராந்தியத்தில் நிரந்தரமான குடியிருப்பாளர்களைக் கொண்டு இருக்க வேண்டும்.

இவ்விரு சர்வதேச விதியை மட்டுமே 2019-ல் இருந்து PUBG Esports கடைபிடிக்க உள்ளது.

வயது, குடியுரிமை கட்டுப்பாட்டால் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் . ஆனால், PUBG விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது என்ற செய்திக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதுமில்லை.

Update : 

PUBG-க்கு கோர்ட் தடை உத்தரவா ? 

PUBG விளையாட்டிற்கு மகாராஷ்டிரா நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளதாக  legal notice என ஓர் படம் பரவி வருகிறது.

விளையாட்டிற்கு தடை விதிப்பதாக பரவிய படத்தில் இருக்கும் நாள், நேரம், legal notice, எழுதி உள்ள வார்த்தைகள், இறுதியில் முடித்து வைத்த விதம் அனைத்தும் சாதாரணமாக இருப்பதை காண முடிகிறது. ஒரு பள்ளி விடுப்பு விண்ணப்பம் போன்று எனலாம்.

மேலும், உத்தரவு எனக் கூறும் வாக்கியங்களில் இலக்கணப் பிழைகள் இருப்பதையும் முழுமையாகப் படித்தால் புரிந்துக் கொள்ளலாம். இதை விட இந்த உத்தரவை பிறப்பித்ததாகக் கீழே இடம்பெற்று இருக்கும் மகாராஷ்டிராவின் உயர் நீதிமன்ற நீதிபதி ” K.SRINIVASULU “என கூகுளில் தேடிப் பார்த்தால் அப்படி ஒரு நீதிபதி இல்லை என்பதை அறிய முடிந்தது.

ஆக, PUBG விளையாட்டிற்கு இந்தியாவில் தடை என பரவும் LEGAL NOTICE  போலியான ஒன்றே .

கல்லூரியில் தடை : 

வேலூரில் உள்ள Vellore institute of Technology-ன் நிர்வாகம் கல்லூரி வளாகத்தில் PUBG game விளையாட தடை பிறப்பித்து உள்ளது. விடுதிகளில் pubg விளையாட்டால் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், மனதளவிலும் பாதிக்கப்படுவதாலும் விடுதி காப்பாளர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIT மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள KAMS என்ற பள்ளி PUBG விளையாட்டு பற்றி மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

உலகளவில் 200 மில்லியன் பதிவிறக்கத்தை PUBG பெற்றுள்ளது, அதில் 30 மில்லியன் பேரில் தினத்தோறும் விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது. புகைப்பிடித்தல், ஆல்கஹால் போன்று PUBG விளையாட்டிலும் பலரும் அடிமையாகி உள்ளதாகவும், தூக்கமின்மை போன்றவற்றால் இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்  என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader