புல்வாமா தாக்குதலில் 13 Sniffer நாய்கள் உயிரிழந்தனவா ?

பரவிய செய்தி
புல்வாமா தாக்குதலில் வீரர்களுடன் 13 ஸ்னைஃபர்(sniffer) நாய்களும் இறந்துள்ளன. அவற்றிற்கும் அஞ்சலி செலுத்துவோம்.
மதிப்பீடு
சுருக்கம்
புல்வாமா தாக்குதலில் ஸ்னைஃபர் நாய்களும் இறந்ததாக எங்கும் தகவல்கள் இல்லை. வீரர்கள் மட்டுமே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
விளக்கம்
காஷ்மீர் புல்வாமாவில் பிப்ரவரி 14-ல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் 13 ஸ்னைஃபர் நாய்களும் இறந்துள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேதனை தெரிவிக்கின்றனர்.
பிப்ரவரி 14-ம் தேதியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் 78 வாகனங்களில் 2,547 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை அழைத்து செல்லும் பொழுது காரில் வெடி மருந்துகள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வாகனங்கள் மோசமாக தாக்கப்பட்டன.
வீரர்களை அழைத்து சென்ற பயணத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மட்டுமே பங்குபெற்று உள்ளனர். இதில், ஸ்னைஃபர் நாய்கள் கொண்டு செல்லப்படவில்லை என்பதே உண்மை.
சி.ஆர்.பி.எஃப் உடைய அதிகாரப்பூர்வ தகவல்களிலும், செய்திகளும் இந்திய வீரர்கள் மட்டும் இறந்ததாக தகவல் உள்ளன. எங்கும் வீரர்கள் தவிர்த்த ஸ்னைஃபர் நாய்கள் இறந்ததாக கூறவில்லை.
புல்வாமா தாக்குதலில் இறந்தது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மட்டுமே. சமூக வலைதளங்களில் ஸ்னைஃபர் நாய்கள் இறந்ததாக பரவும் படங்களை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.