This article is from Feb 22, 2019

புல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீரர்கள் புகைப்படமா ?

பரவிய செய்தி

புல்வாமா தாக்குதலுக்கு 9 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம். அதிகம் பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

புல்வாமா தாக்குதலுக்கு தொடர்பில்லாத படங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

விளக்கம்

பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்திய வீரர்கள் இறந்ததில் பல்வேறு வதந்திகள் மற்றும் சம்பந்தமில்லாத படங்கள், தகவல்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பரவியது.

இறந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பற்றி பதிவிடப்படும் பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில், பேருந்தில் ராணுவ உடையில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம் தாக்குதலுக்கு முன்பாக 9 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது எனக் கூறி பகிரப்படுகிறது.

இப்படங்கள் எப்பொழுது எடுக்கபட்டது என தேடுகையில், புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கும், இப்படத்திற்கும் எந்தவித சம்பந்தமில்லை என்ற ஆதாரம் கிடைத்துள்ளது. இதே படத்தை 27 ஜனவரி 2018-ல் Instagram-ல் Para commando @special_army_force என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் நடைபெற்றது பிப்ரவரி 14-ம் தேதி, ராணுவ வீரர்கள் பேருந்தில் உறங்கும் புகைப்படம் insta-வில் பதிவிடப்பட்டது 27-ம் தேதி ஜனவரி. இதற்கு முன்பாகவே ஜனவரி 26-ல் இப்படம் பிற சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிட வீடியோக்கள் உண்மையா ?

ஆகையால், புல்வாமா சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் மீதான தாக்குதலுக்கு முன்பான படங்கள் எனக் கூறுபவை வதந்தியே !

மேலும் படிக்க : இறந்த வீரர்களின் சவப்பெட்டிகள் என பரவும் படங்கள் உண்மையா?

புல்வாமா தாக்குதல் குறித்த பல பொருந்தாத தகவல்கள் மற்றும் வதந்திகள் வெளியாகி வருகின்றன. Youturn புல்வாமா தாக்குதலில் தொடர்பான வதந்தி பற்றி பல செய்திகளை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க : இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader