This article is from Oct 08, 2021

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் ஞானஸ்தானம் பெறுவதாக பரவும் வதந்தி !

பரவிய செய்தி

பஞ்சாப் இத்தாலிய காங்கிரஸ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் காட்சி,..பதவிக்காக இப்படியா?

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மதம் மாறியதாக 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்றுள்ள நபரின் உருவம் தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன் வேறுபட்டு உள்ளதை பார்க்கலாம்.

கிறிஸ்தவர்கள் பலரும் சூழ்ந்து இருக்க டர்பன் அணிந்த ஒருவர் தண்ணீரில் இருக்கும் பாதிரியாரின் அருகே செல்கையில், 30வது நொடியில் சிம்ரன்ஜித் சிங் என்பவர் சாமுவேல் என பாதிரியார் ஞானஸ்தானம் பெறுபவரின் பெயரை தெளிவாய் உச்சரிப்பதை கேட்க முடிகிறது.

சரண்ஜித் சிங் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற போது தலித் சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என செய்தியிகளில் வெளியாகியது. அவர் சீக்கிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக எந்த தகவல்களும் இல்லை.

முடிவு : 

நம் தேடலில், பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அதில் இருப்பது சரண்ஜித் சிங் அல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader